மு.க.ஸ்டாலினே வந்து உட்கார்ந்தாலும் கோவையில் பாஜகதான் வெற்றி பெறும் – அண்ணாமலை சவால்

310 0

தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் கோவை தொகுதியில் இருந்து தொடங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் .

கோயம்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே தங்கியிருந்து பரப்புரை செய்தாலும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தான் வெற்றிபெறும் என அந்தத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று கோவைக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பிரதமர் மோடி உத்தரவிட்டதால் தான் கோவை தொகுதியில் போட்டியிடுவதாகக் கூறினார்.

டெல்லி அரசியலில் தனக்கு விருப்பமில்லை எனவும், தமிழக அரசியலில் தொடர்ந்து இருப்பேன் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் கோவை தொகுதியில் இருந்து தொடங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் .

தோல்வி பயத்தால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் 2026 இல் ஆட்சியமைப்பதற்காகவே பிரதமர் வருகை தருவதாகக் கூறினார்.

Related Post

முரண்டு பிடிக்கும் விசிக, ம.கம்யூ, மநீம.! கூட்டணிக்குள் நடப்பது என்ன.?

Posted by - March 20, 2026 0
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்குள் தொகுதி பங்கீட்டை…

“என்னை உலக நாயகன் என யாரும் அழைக்கவேண்டாம்” – ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

Posted by - November 11, 2024 0
கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது என கமல்ஹாசன் கருத்து. தன்னை எந்தவிதமான அடைமொழியுடனும் அழைக்க வேண்டாம்…

வாழ்க தமிழ்நாடு…பாரதியார் பாட்டு…சட்டமன்ற உரையை நிறைவு செய்த ஆளுநர்

Posted by - January 9, 2023 0
வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் எனக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிறைவு செய்தார். ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று ஆளுநர்…

பாஜக மாநிலத் தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

Posted by - April 11, 2025 0
பாஜக மாநிலத் தலைவர் தேர்தலில் நயினார் நாகேந்திரன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வானதாகவும், நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பாஜக தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். பாஜக…

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Posted by - August 26, 2025 0
சென்னை: முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *