மூக்கிரட்டை இலை.. சிறுநீரக நோய்களை விரட்டியடிக்கும் மூலிகை நண்பன்.. அருமையான மூக்கிரட்டை கீரை சூப்

231 0

சென்னை:

சிறுநீரகத்தின் ஆரோக்கியம் காக்கக்கூடியது மூக்கிரட்டை கீரைகள்.. இந்த கீரையின் மற்ற பயன்கள் என்னென்ன? சத்தான மூக்கிரட்டை ரசம் எப்படி செய்வது தெரியுமா?மூக்கிரட்டையை, மூக்கரட்டை கீரை என்பார்கள்.. சிறுநீரகத்தின் பாதுகாவலன் என்று சொல்லலாம். இந்த செடிகளின் வேர்கள்கூட மருந்தாக சிகிச்சைகளில் பயன்படுகிறது.. வேர்களை காயவைத்து, பொடிசெய்து, சுடுநீரில் குடித்து வந்தால், கண்கள் சம்பந்தமான நோய்கள் தீர்ந்துவிடும்.

சிறுநீரகம்:

சிறுநீரகத்துக்கு பேருதவி செய்யக்கூடிய இந்த கீரைகள், ரத்தத்தில் அதிகரிக்கும் யூரியா மற்றும் கிரியேட்டினின் அளவை குறைக்க உதவுகின்றது.. ரத்த விருத்தி அடைய வேண்டுமானால், இந்த மூக்கிரட்டை கீரையை கூட்டு போல செய்து சாப்பிடுவார்கள்.. எப்போதுமே மூக்கிரட்டை கீரையை உணவில் எடுத்துகொள்ளும் போது அதிக காரம் சேர்க்கக்கூடாது என்பார்கள்.. குளிர்ச்சித்தரும் உணவுகளைதான் எடுக்க வேண்டுமாம்.மூக்கிரட்டை இலை.. சிறுநீரக நோய்களை விரட்டியடிக்கும் மூலிகை நண்பன்.. அருமையான  மூக்கிரட்டை கீரை சூப் | Do you know the Excellent Health Benefits of  Mookkirattai Keerai ...

சிறுநீரகம்:

வழக்கமாக, சிறுநீரகத்தில் தொந்தரவு என்றால், இந்த கீரைகளை சுத்தம் செய்து, அதன் தண்டுகளையும் நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அது பாதியாக வரும்வரை சுண்ட காய்ச்சி குடிக்க தருவார்கள். இதனால் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், அது உடைந்து கரைந்துவிடும்.. சிறுநீரகத்தில் தொற்றுநோய்கள் இருந்தாலும், இந்த கீரை குணப்படுத்திவிடும்.. மஞ்சள் காமாலை என்றால், கீழாநெல்லியுடன் இந்த மூக்கிரட்டையை சேர்த்து மருந்தாக தருவார்கள். அதேபோல, மூக்கிரட்டை இலைகளை சுத்தம் செய்து, விழுதாக அரைத்து, நெல்லிக்காய் அளவு வாயில் போட்டு விழுங்கி வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் மூலநோய்களும் நீங்கும்.

உடல் எடை:

உடல்எடை குறைபவர்களுக்கு பெஸ்ட் சாய்ந்த இந்த மூக்கிரட்டை கீரைகள்.. மூக்கிரட்டை பொடி என்றே கடைகளில் விற்கிறார்கள்.. இந்த பொடியையும் உடல் பருமனை குறைக்க பயன்படுத்தலம்.. புற்றுநோய்களை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடியது இந்த இலைகள்.. ஆண்மைக்குறைவு மற்றும் விறைப்புத்தன்மையையும் குணப்படுத்தும். மூக்கிரட்டை கீரையில் எப்படி ரசம் வைப்பது தெரியுமா? இந்த கீரையை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில், 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

மூக்கிரட்டை ரசம்:

அதில் சுத்தம் செய்து வைக்கப்பட்டிருக்கும் கீரையை போட்டு கொதிக்க விட வேண்டும். கீரை நன்றாக வெந்ததும், தட்டிய பூண்டு பற்கள், சீரக தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இறுதியில் வடிகட்டி குடித்தாலே, சிறுநீர் கடுப்பு முதல் சிறுநீரக தொற்று வரை பறந்துவிடும். மிகுந்த மருத்துவ குணம் இருந்தாலும், டாக்டர்களின் அறிவுரையோடு இந்த கீரையை எடுப்பது பாதுகாப்பானது..!!

Related Post

ஆளுநருக்கு நோ சொன்ன அஜித்குமார்.. இந்த விளையாட்டு எல்லாம் விஜய்யோடு நிறுத்திக்கங்க பாஸ்!

Posted by - February 15, 2025 0
என்னதான் வெளி உலகத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை என அஜித் காட்டிக் கொண்டாலும் நாட்டு நடப்புகளை அப்டேட்டில் வைத்திருக்கிறார் போல. அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது.…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம்- 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Posted by - November 23, 2022 0
பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளிடம் தவறாக நடந்த பள்ளி நிர்வாகி…

தேர்தலுக்கு பின் கழகத்திலும் அரசியலிலும் பல மாற்றங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

Posted by - February 23, 2024 0
பிப்ரவரி 26ஆம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடுவீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜகவின் அநீதிகளை மக்களிடம் கொண்டு…

‘டீ’ யில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி ; விஷமாக மாறிய காதல்… கம்பி என்ன வைத்த போலீஸ்

Posted by - March 4, 2025 0
காதலை கைவிட நினைத்த காதலனுக்கு டீயில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற காதலி. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் சட்டக்கல்லூரி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *