ரசிகர்கள் வயிற்றிலடித்த கூலி…டிக்கெட் விலை இவ்வளவா..

87 0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்திற்கு ரூ 2000 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள்

கூலி பட டிக்கெட் விலை

கூலி படத்திற்கான முன்பதிவுகள் சில நாட்கள் முன்பு தொடங்கின. முன்பதிவுகள் தொடங்கிய ஒரு சில மணி நேரங்களில் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் கூலி திரைப்படம் இதுவரை 56 ஆயிரம் டிக்கெட் விற்பனை செய்து  14 கோடிக்கும் மேல் முன்பதிவுகளில் வசூல் செய்துள்ளது. முன்னதாக விஜயின் லியோ படத்தின்  11 கோடி வசூல் சாதனையை முறியடித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் முந்தை பெரிய படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது கூலி. இப்படியான நிலையில் பல திரையங்குகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக விலைக்கு கூலி படத்தின் டிக்கெட் விற்கப்படுவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

கோயம்புத்தூர் பொள்ளாச்சி தங்கம் திரையரங்கில் 190 மதிப்பிலான கூலி படத்தின் டிக்கெட் 400 ரூபாய்க்கு விற்கப்படுவதை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

 

அதே போல் கர்நாடகா மாநிலம் பெங்களுரில் ரூ 2000 வரை கூலி படத்தின் டிக்கெட் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு தவிர்த்து ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கூலி படத்தின் அதிகாலை 6 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகின்றன. பெங்களுரில் முன்பதிவு தொடங்கிய 30 நிமிடத்தில் 10 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனையாகி பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது கூலி. கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என கர்ணாடக அரசு உத்தரவிட்ட பின்னும் கூலி படத்திற்கு 500 முதல் 2000 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக  ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். படத்தின் பெயர் மட்டும் தான் கூலி  ஆனால் இந்த விலையில்  கோடீஸ்வரர்கள் தான் படம் பார்க்க முடியும் என நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

Related Post

விஜய் சேதுபதிக்காக கதை எழுதும் மிஷ்கின்!அடுத்து வரப்போகும் தரமான சம்பவம்!

Posted by - May 27, 2023 0
பிசாசு 2’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதிக்காக ஒரு கதை எழுதிவருவதாகவும், விரைவில் அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். ஆண்ட்ரியா…

காலை 8 மணிக்கே ரஜினியுடன் சேர்ந்து “சரக்கடித்து” ராதாரவி.. வீட்டுக்கு வரவழைத்து அவமானப்படுத்திய சம்பவம்

Posted by - November 26, 2022 0
தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் ராதாரவி. இவர் அண்மையில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் குறித்து பேசியிருந்தார். ராதாரவி – ரஜினி   இதில், அருணாச்சலம்…

ஒரே கதையை 2 படமாக எடுத்து ரசிகர்களை குழப்பிய இயக்குனர்கள்.. என்ன கொடுமை பாஸ் இதெல்லாம்

Posted by - January 1, 2025 0
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்த கதையை பின்பற்றி பல படங்கள் வருவதுண்டு. சில இயக்குனர்கள் வெற்றி பெற்ற படத்தின் நடிகர்களை வைத்து அதே…

விஜய் – த்ரிஷா ஜோடி சேர்ந்தாலே அது நடக்கும்.. என்ன விஷயம் தெரியுமா

Posted by - April 9, 2025 0
விஜய்யின் GOAT தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், லைலா என பலரும் நடித்திருந்தனர். இரட்டை…

விஷாலின் திரை வாழ்க்கையில் நம்பர் 1 படம் மார்க் ஆண்டனி தான்.. தமிழகத்தில் மட்டுமே இத்தனை கோடி வசூல்

Posted by - September 21, 2023 0
விஷால் இரும்புத்திரை படத்திற்கு பின் நடிகர் விஷாலின் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படம் வரவில்லை என்று தான் ரசிகர்களின் கருத்தாக இருந்தது. அதை சுக்குநூறாக உடைத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *