ரூ.10.71 லட்சம் கோடி கடன் சுமை

43 0

Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசின் கடன்சுமை 2027ம் நிதியாண்டின் முடிவில் ரூ.10.71 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசு வரும் 2026-27 நிதியாண்டில் 1.79 லட்சம் கோடி ரூபாயை கடனாக பெற திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பொருளாதார நிலை

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் அறிக்கையின்படி, மாநிலமானது வலுவான பொருளாதார வளர்ச்சியுடன், பெயரளவு மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பு 2025-26 ஆம் ஆண்டில் 14.5 சதவிகிதமாக வளர்ச்சியடையும் எனவும், உண்மையான வளர்ச்சி 9 சதவிகிமாகவும், சராசரி பணவீக்கம் 5.5 சதவிகிமாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2027-28 மற்றும் 2028-29 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி ஆண்டுக்கு 14 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வருவாய் விவரங்கள்

வருவாய் வரவினங்கள்:

மத்திய அரசின் நிதிப் பகிர்வு உட்பட, மாநில அரசின் மொத்த வருவாய் 2025-26 நிதியாண்டில் 3,09,697.92 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட நிலையில்,  2026-27 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் இந்த தொகையானது 3,44,575.31 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசின் சொந்த வரி, வரி அல்லாத வருவாய்:

மாநில அரசின் சொந்த வரி வருவாய், 2025-26 நிதியாண்டில் 2,06,540.36 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில்,  2026-27 நிதியாண்டில் 2,29,579.12 கோடி ரூபாயாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதேநேரம், 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் இந்த வரி அல்லாத வருவாய் 27 ஆயிரத்து 703 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வரிகளில் மாநில அரசின் பங்கு

2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் 56,819.23 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்த மத்திய அரசின் வரிகளில் மாநில அரசுக்கான பங்கு, 2026-27 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் 62,530.65 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் செலவின விவரங்கள்:

2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் வருவாய் செலவினங்கள் 3,93,271.63 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025-26 நிதியாண்டிற்கானதை காட்டிலும் 3.79 சதவிகிதம் அதிகமாகும். இதில் ஊதிய செலவினங்களுக்கு மட்டுமே 94 ஆயிரத்து 377 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சம்பளம் அல்லாத செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பிற்கான செலவினமாக 18 ஆயிரத்து 735 கோடி ரூபாயாகவும், ஓய்வூதியம் தொடர்பான செலவினங்களுக்காக 45 ஆயிரத்து 323 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.  மானியங்கள் மற்றும் நிதி மாற்றங்களுக்காக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 108 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் கடனுக்கான வட்டி செலுத்துவதற்காக 78 ஆயிரத்து 677 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நடப்பு நிதியாண்டில் 51 ஆயிரத்து 442 கோடியை மூலதன செலவிற்காக ஒதுக்கப்பட்ட நிலையில், 2026-27 நிதியாண்டிற்காக 59 ஆயிரத்து 561 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு அரசின் நிதி, வருவாய் பற்றாக்குறை

2026-27 நிதியாண்டிற்கான இடைக்காலபட்ஜெட்டில் மாநில அரசின் வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.  மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பில் நிதிப்பற்றாக்குறையின் விகிதம், 3.00 சதவிகிதமாக உள்ளது.

தமிழ்நாடு அரசின் கடன் விவரங்கள்

மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதலும் திரும்பச் செலுத்துதலும் மதிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, 2026-27 ஆம் ஆண்டில் மாநில அரசு 1,79,809.65 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. அதேநேரம், 60,413.42 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்த உள்ளது. இதன் விளைவாக, 31.03.2027 அன்று நிலுவையில் உள்ள கடன் 10,71,770.34 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 2026-27 ஆம் ஆண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 26.35 சதவிகிதம் ஆக இருக்கும்”என தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000

Posted by - March 3, 2026 0
முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையுடன், சிறப்பு நிதி வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஏற்கனவே வழங்கப்படும் தொகையுடன் ரூ.2,000 கூடுதலாக வரவு.…

கருணாநிதி சூழ்ச்சி..ஜெயலலிதாவோடு மாட்டி விட்டுட்டாரு..

Posted by - March 3, 2026 0
பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னால் இந்த பெண் அதிமுகவுக்கு தலைமையாக வரக்கூடும் என 1996ல் கருணாநிதி கணித்தார். அதனால் தான் என்னை சொத்து குவிப்பு வழக்கில் இணைத்து விட்டார்…

எங்களைத் தாண்டி தொடுங்க.. விஜய்க்காக களமிறங்கப்போகும் அதிமுக! எடப்பாடி போடும் ஸ்கெட்ச்

Posted by - October 6, 2025 0
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை காவல்துறையினர் கைது செய்தால் அவருக்காக அதிமுக போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ளது.…

விஜய்க்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!

Posted by - February 4, 2026 0
தவெக தலைவர் விஜய் அதிமுகவை ஊழல் கட்சி என குறிப்பிட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய்க்கு கள நிலவரம் தெரியவில்லை என கூறியுள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *