ரூ.1000 மகளிர் உரிமை தொகை மேல்முறையீடு.. இணையதளம் முடக்கம்.. தவிக்கும் பெண்கள்!

280 0

 மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமை தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், இணையதளம் முடங்கியுள்ளதால் விண்ணப்பதாரர்கள் தவித்து வருகின்றனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு திட்டத்தின் தொடக்க நாளாக கடந்த 15-ந் தேதியன்று அவர்களின் வங்கிக்கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. சில மகளிரின் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்படாததால் தொகை வரவு வைக்க இயலாத நிலை உள்ளது.

இதனை சரி செய்து அவர்களின் வங்கி கணக்குகளுக்கும் விரைவில் உரிமைத்தொகை வரவு வைக்க அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று அஞ்சலக வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மனியார்டர் மூலமாக தொகை அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.

மகளிர் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், பெண்கள் பலரும் இ சேவை மையத்தில் குவிந்து வருகின்றனர். மேலும் விண்ணப்பம் அளித்தும் தொகை வரவு வைக்கப்படாதவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய அரசால் https://kmut.tn.gov.inஎன்ற இணையதளம் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம். இதற்காக கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. தங்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களுடன் 1100 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டும் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த இணையதளம் ஓரிரு நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் முடங்கியுள்ளதால் பலரும் சிரமமடைந்து வருகின்றனர். இணையதளம் பராமரிப்பில் இருப்பதாகவும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

உடல், மனம் இரண்டும் சமநிலையை அடைய உதவும் பார்சுவ பகாசனம்

Posted by - March 2, 2023 0
வடமொழியில் ‘பகா’ என்பது நாரையைக் குறிக்கும் சொல். ஆனால், பகாசனம் என்பது Crow Pose என்றும் Crane Pose என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், இரண்டும் வெவ்வேறு ஆசனங்கள்.…

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி கிலோவுக்கு ரூ.15 அதிகரிப்பு

Posted by - July 25, 2023 0
தக்காளி விலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும ஜெட்வேகத்தில் உயர்ந்து 100-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி உற்பத்தியில் பாதிப்பு, கனமழை…

தீக்காயம் ஏற்பட்டால் கண்களைப் பாதுகாப்பது எப்படி?

Posted by - October 18, 2025 0
கடந்த தீபாவளித் திருநாளில் 10 வயது பெண் குழந்தை புஸ்வாணத்தைப் பற்ற வைத்தது. ஆனால், புஸ்வாணம் மத்தாப்புகளை உதிர்க்கவில்லை. உடனடியாக அந்தக் குழந்தை புஸ்வாணத்தின் திரியைச் சரிசெய்ய,…

விவசாயிகள் எதிர்ப்பை தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்ப்பு..

Posted by - December 28, 2022 0
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்தான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ஆலோசனையில்…

சர்க்கரை நோயாளிகள்.. எந்த எண்ணெய்யை சமையலுக்கு யூஸ் பண்ணலாம்? நீரிழிவு நோயாளிக்கேற்ற எண்ணெய் இதுவா?

Posted by - November 29, 2023 0
சென்னை: நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிட வேண்டும் என்பதிலேயே பல குழப்பங்களு வந்துவிடும் நிலையில், என்ன எண்ணெய்யை சமைக்கலாம் என்பதில் அதற்கு மேல் குழப்பங்கள் உள்ளன. சர்க்கரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *