வாட்ஸ்-அப்பில் பயனர்களை கவரும் புதிய அப்டேட்கள்: அரட்டை செயலியின் தாக்கம் காரணமா?

202 0

சென்னை: வாட்ஸ்-அப் செயலியில் பயனர்களை ஈர்க்கும் வகையிலான புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அது குறித்து பார்ப்போம்.

வாட்ஸ்-அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் அறிமுகம் செய்வது வழக்கம்.அந்த வகையில் வாட்ஸ்-அப் மெசஞ்சரில் பயனர்களை ஈர்க்கும் வகையில் மெட்டா ஏஐ மூலம் சாட் தீமை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் அம்சம், வீடியோ அழைப்பில் பேசும்போது ஏஐ மூலம் ஜெனரேட் செய்யப்பட்ட பேக்கிரவுண்ட், செயலியில் இருந்தபடியே போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து அதிலும் பேக்கிரவுண்டை மாற்றும் அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அப்டேட்கள் விரைவில் உலக அளவில் பயனர்களுக்கு கிடைக்கப்பெறும் என தகவல். இது அனைத்து தரப்பு பயனர்களையும் ஈர்க்கும் என மெட்டா நம்புகிறது.

காரணம் என்ன? – அண்மைய நாட்களாக இந்தியாவில் உள்ள பயனர்கள் மத்தியில் சோஹோ நிறுவனத்தின் ‘அரட்டை’ மெசேஜிங் செயலி பேசுபொருளாகி உள்ளது. இந்திய அளவில் ஆப் ஸ்டோரில் ‘மெசேஜிங் ஆப்’ பிரிவில் அரட்டை முன்னிலை பெற்றுள்ளது. அரட்டை செயலியின் டவுன்லோட் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் மெட்டா உட்பட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்திய சந்தை முக்கியமானதாக அமைந்துள்ளது.

அரட்டை செயலியை வாட்ஸ்-அப் உடன் ஒப்பிடும் போது வாட்ஸ்-அப்பில் இருப்பது மாதிரியான அம்சங்கள் அதிகம் இல்லை. இருப்பினும் தங்களது பிடியை தளர்த்த கூடாது என்பதில் மெட்டா உறுதியாக இருப்பதனால் புதிய அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளதாக டெக் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Related Post

தினசரி பாதிப்பு மீண்டும் 300-ஐ தாண்டியது: கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,076 ஆக உயர்வு

Posted by - March 8, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. பாதிப்பு கடந்த 5-ந்தேதி 324 ஆக…

அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Posted by - April 15, 2024 0
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அம்பேத்கரின் கொள்கையை உண்மையில் அமல்படுத்தி உள்ளோம். காங்கிரஸ்…

மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் – வெளியான விலை விவரங்கள்

Posted by - June 10, 2025 0
இந்தியாவில் சேவையை வழங்க ஸ்டார்லிங்க ஏற்கனவே லைசென்ஸ் பெற்றுவிட்ட நிலையில், 2 மாதங்களுக்குள் சேவை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் விலை என்ன தெரியுமா.? எலான்…

இன்று மாலை 6 மணிக்கு மேல் பரப்புரை செய்தால் சிறை தண்டனை

Posted by - April 17, 2024 0
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர , வேட்பாளர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் மக்களவைத் தேர்தலில், முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும்…

5ஜி சேவையால் டேட்டா வேகமா காலியாகுதா? ஏர்டெல் வழங்கும் சூப்பர் டேட்டா வவுச்சர் பிளான்

Posted by - December 20, 2022 0
AIRTEL: எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் சப்ஸ்கிரிப்ஷன் 28 நாட்களுக்கு மட்டுமே என்பதையும், மேலும் இந்த 28 நாட்களுக்கு யூஸர்கள் ஏதாவது ஒரு பிளாட்ஃபார்மை மட்டுமே தேர்வு செய்ய முடியும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *