‘விக்ரம்’ படத்திலேயே ‘லியோ’ பற்றி ஹின்ட் கொடுத்த லோகேஷ்? – வீடியோவில் இதை கவனிச்சீங்களா?

306 0

தற்போது லியோ படம் காஷ்மீரில் படமாவதால் இதுவும் எல்சியூவில் வரும் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

கடந்த 3 ஆம் தேதி லியோ படத்தின் ப்ரமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டீசரை டிகோட் செய்கிறேன் என்ற பெயரில் படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என ரசிகர்கள் தங்கள் யூகங்களை பகிர்ந்துவருகின்றனர்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் விஜய்க்கு மட்டுமல்ல, திரிஷாவுக்கும் இது 67வது படமாம். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் வெளியான தளபதி 67 பட பூஜை வீடியோவில் நடிகர் மரியம் ஜார்ஜ் இடம்பெற்றிருந்தார். இவர் கைதி படத்தில் நெப்போலியன் என்ற போலீஸ் கான்ஸ்டபிளாக கலக்கியிருப்பார். அதே போல விக்ரம் படத்தல் ஏஜென்ட் டீனாவாக கலக்கிய வசந்தி சமீபத்தில் காஷ்மீர் சென்றுள்ள படக்குழுவில் இடம்பிடித்திருந்தார். தளபதி 67ல் ‘கைதி’ நெப்போலியனும் ‘விக்ரம்’ ஏஜென்ட் டீனாவும் இடம்பிடித்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தில் செம்பன் வினோத் நடித்துள்ள ஜோஸ் கதாப்பாத்திரம் பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. அதில், காஷ்மீருக்கு ஒரு கேஸ் விஷயமாக போயிருந்தப்போ அவன் பழக்கமானான் என அமர் குறித்து பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது.தற்போது லியோ படம் காஷ்மீரில் படமாவதால் இதுவும் எல்சியூவில் வரும் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். தளபதி விஜய்யின் லியோ குறித்து ரசிகர்களின் அதீத ஆர்வத்தையே இது காட்டுகிறது.

Related Post

மூன்று நாட்களில் வீரன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

Posted by - June 5, 2023 0
வீரன் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வீரன். சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படத்தை ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில்…

ரிலீஸ் பிரச்சனை இருந்தாலும் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தக் லைஃப்.. இதுவரை எத்தனை கோடி கலெக்ஷன்?

Posted by - June 4, 2025 0
தக் லைஃப் கமல்ஹாசன்-மணிரத்னம் பல வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ள படம் தக் லைஃப். இதில் கமலுடன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி…

எதிர்நீச்சல் சீரியலில் திடீரென மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி காட்சி- எங்கே உள்ளார் பாருங்க, வைரல் போட்டோ

Posted by - September 12, 2023 0
எதிர்நீச்சல் சீரியல் திருச்செல்வம் அவர்கள் பல வருடங்களுக்கு முன் கோலங்கள் என்ற தொடரை இயக்கி மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அதன்பிறகு சில காலம் அவரது பெயர்…

பொன்னியின் செல்வன் 2 மூன்று நாட்களில் இவ்வளவு வசூல் செய்துவிட்டதா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - May 1, 2023 0
மிக பிரம்மாண்டமாக கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தது. சில கலவையான விமர்சனங்களை பெற்றாலும்,…

விஜய் டிவி தீனா – பிரகதியின் வெட்டிங் போட்டோஸ் ஷூட்!வைரலாகும் போட்டோஷூட்!

Posted by - June 1, 2023 0
விஜய் டிவி தீனா – பிரகதியின் வெட்டிங் போட்டோஸ் ஷூட்!வைரலாகும் போட்டோஷூட்!   போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தீனாவின்..வெட்டிங் போட்டோ ஷூட் தற்போது வைரலாகி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *