விஜய்க்கு எதிராக அஜித்! திமுக. அதிமுக, பாஜக போடும் ஸ்கெட்ச்! தவெக-வை வீழ்த்த ப்ளான்

179 0

அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய்க்கு எதிராக அஜித்தைப் பயன்படுத்த அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றனர்.

தமிழக அரசியல் களம் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. நடிகர் விஜய் கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய பிறகு, தமிழக அரசியல் பெரும் எதிர்பார்ப்புக்கு ஆளானது.

அரசியல் களத்தில் விஜய்:

தனது முதல் மாநாட்டில் தனது கொள்கைகள், கோட்பாடுகள், செயல்திட்டங்களை அறிவித்த விஜய் தன்னுடைய அரசியல் எதிரி தி.மு.க. என்றும், கொள்கை எதிரி பா.ஜ.க. என்றும் உறுதிபட கூறினார். மேலும், விஜய் பா.ஜ.க.வை காட்டிலும் தி.மு.க. மீதே கடும் விமர்சனத்தையும், தாக்குதல் அரசியலையும் நடத்தி வருகிறார்.

முதல் அரசியல் மாநாட்டிற்கு பிறகு வெளியில் வராத விஜய், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களைச் சந்தித்தபோது பேசிய கருத்துக்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றே அரசியல் நிபுணர்களும், அரசியல் கட்சிகளும் கருதுகின்றனர்.

விஜய்க்கு எதிராக அஜித்:

இதனால், விஜய்க்கு எதிராக பல வியூகங்களை அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ளனர். அதில், விஜய்க்கு எதிராக அவர்கள் கையில் எடுத்துள்ள முக்கிய அஸ்திரம் அஜித். தமிழ் சினிமாவில் விஜய்க்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட ஒரு நடிகர் அஜித் மட்டுமே. விஜய் படங்களுடன் நேரடியாக மோதும் அளவிற்கு படத்தை வெளியிடும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் அஜித்.

விஜய்யைப் போலவே கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித் ரசிகர்களின் ஆதரவைப் பெற அரசியல் கட்சிகள் துடித்து வருகின்றனர். தனக்கும், அரசியலுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று அஜித் வெளிப்படையாக அறிவித்தாலும், வரும் தேர்தலில் விஜய்யை வீழ்த்த மிகப்பெரிய அஸ்திரமாக அஜித்தே இருப்பார் என்று அரசியல் கட்சிகள் கருதுகின்றன.

பாராட்டும், பத்மபூஷணும்:

இதன் காரணமாகவே, தற்போது கார் பந்தயத்தில் முழு வீச்சில் ஈடுபட்டு வரும் அஜித்திற்கு தொடக்கம் முதலே திமுக அமைச்சர்கள் போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்தனர். அவரது பந்தய காரில் தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முத்திரை இருப்பதால்தான் பாராட்டியதாக காரணங்கள் கூறப்பட்டாலும், தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கும் விஜய்யின் போட்டி நடிகரான அஜித் ரசிகர்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியாகவும் இது பார்க்கப்பட்டது.

மேலும், யாருமே எதிர்பாராத வகையில் நடிகர் அஜித்திற்கு பத்மபூஷண்  விருது வழங்கப்பட்டது. விஜய் மிக கடுமையாக விமர்சிக்கும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரியான பா.ஜ.க., அவருக்கு எதிராக அஜித் ரசிகர்களை திருப்பும் விதத்தில் இந்த விருது தற்போது திடீரென வழங்கப்பட்டுள்ளதாக சில அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அஜித்திற்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டபோது அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அஜித் – ஜெயலலிதாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தே வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், அஜித்தின் பிறந்த நாளுக்கு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

வியூகம் வகுக்கும் அரசியல் கட்சிகள்:

அரசியலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று அஜித் கூறினாலும், வரும் சட்டமன்ற தேர்தலில் அவரது பெயர் அதிகளவு அரசியல் கட்சியினரால் பயன்படுத்தப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னோட்டங்கள்தான் மேலே நிகழ்ந்த சில சம்பவங்கள் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறியதால், அவரது ரசிகர்கள் அரசியல் நடவடிக்கையில் பெரிதும் ஈடுபடுவதில்லை. மேலும், இணையத்தில் நடக்கும் விஜய் ரசிகர்கள் – ரஜினி ரசிகர்கள் மோதல், விஜய் – அஜித் ரசிகர்கள் மோதலையும் அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Post

த.வெ.க.வை கண்டு பயத்தின் உச்சத்தில் தி.மு.க. – விஜய் கடும் விமர்சனம்

Posted by - September 9, 2025 0
வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட…

கருணாநிதி சூழ்ச்சி..ஜெயலலிதாவோடு மாட்டி விட்டுட்டாரு..

Posted by - March 3, 2026 0
பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னால் இந்த பெண் அதிமுகவுக்கு தலைமையாக வரக்கூடும் என 1996ல் கருணாநிதி கணித்தார். அதனால் தான் என்னை சொத்து குவிப்பு வழக்கில் இணைத்து விட்டார்…

கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்

Posted by - December 8, 2025 0
அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நகராட்சி…

“சேப்பாக்கத்தின் தென்றல் இனி செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்” – உதயநிதிக்கு செந்தில் பாலாஜி வாழ்த்து!

Posted by - December 13, 2022 0
நாளை காலை 9:30 மணிக்கு அவர் அமைச்சராக பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின். அமைச்சராக பதவியேற்க போகும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு மின்சாரத்துறை…

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Posted by - August 26, 2025 0
சென்னை: முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *