விலை உயர்வை கட்டுப்படுத்த கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல்: மத்திய அரசு தகவல்

197 0

புதுடெல்லி:

வரவிருக்கும் காரீப் பருவத்தில் வெங்காயத்தின் உற்பத்தி குறைந்து விலை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே விலை உயர்வை கட்டப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் வெங்காயத்தின் விலை உயர்வை தடுக்கும் விதமாக கடந்த மாதம் மத்திய அரசு 3 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து, கையிருப்பில் வைத்தது.தமிழகத்தில் உச்சத்தில் வெங்காய விலை : மூன்று மாநிலங்களில் பெய்த கனமழையால்  வரத்துக் குறைவு!

அதன் தொடர்ச்சியாக வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு வெங்காயத்தின் இருப்பு அளவை 5 லட்சம் டன்னாக உயர்த்தும் விதமாக கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கூடுதல் கொள்முதல் இலக்கை அடைய இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு ஆகியவை தலா ஒரு லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் செய்யப்பட்ட இருப்புகளை முக்கிய நுகர்வு மையங்களில் அளவீடு செய்து வினியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சில்லரை விலைகள் அகில இந்திய சராசரியை விட அதிகமாகவும் அல்லது முந்தைய மாதத்தை விட கணிசமாக அதிகமாகவும் இருக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள முக்கிய சந்தைகளை குறிவைத்து, இருப்பிலிருந்து வெங்காயத்தை விடுவிப்பது தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இருப்பிலிருந்து சுமார் 1,400 டன் வெங்காயம் இலக்கு சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு கிடைப்பதை அதிகரிக்க தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

முக்கிய சந்தைகளில் வெளியிடுவதை தவிர, இருப்பிலிருந்து வெங்காயம் சில்லரை நுகர்வோருக்கு ஒரு கிலோ ரூ.25 என்ற மானிய விலையில் 21-ந்தேதி முதல் (அதாவது இன்று முதல்) சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலம் கிடைக்கும். வெங்காயம் கொள்முதல் செய்தல், இருப்புகளை இலக்கு வைத்தல் மற்றும் ஏற்றுமதி வரி விதித்தல் போன்ற அரசு எடுத்துள்ள பன்முக நடவடிக்கைகள் வெங்காய விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பயனளிக்கும், அதே நேரத்தில் நுகர்வோருக்கு மலிவு விலையில் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Post

இது சும்மா கிழி.. ரூ.1,199 போதும்.. 50 மணி நேர பிளேபேக்.. AI வாய்ஸ் அசிஸ்டன்ட்.. IPX4 ரேட்டிங்.. எந்த மாடல்?

Posted by - November 6, 2025 0
ஐடெல் நிறுவனத்தின் பட்ஜெட் விலை இயர்பட்ஸ் மாடலான ஐடெல் ரிதம் எக்கோ (itel Rhythm Echo) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் என்விரான்மென்டல் நாய்ஸ்…

அக்கவுண்ட் நம்பரை மாத்தாமலே வங்கியை மாத்திக்கலாம் மக்களே! செம செம!

Posted by - April 1, 2026 0
வங்கியின் வங்கிக்கணக்கு எண்ணை மாற்றாமலே வங்கியை மாற்றிக்கொள்ளும் வசதியை விரைவில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது. நாட்டில் உள்ள அனைவருக்கும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர்…

90 நாடுகளில் 8,330 இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்: மத்திய அரசு தகவல்

Posted by - July 29, 2023 0
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வெளிநாடு சிறைகளில் வாடும் இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் எழுத்துப்பூர்வமாக…

வடமாநிலங்களில் நிலநடுக்கம்: பதற்றத்தில் தவித்த மக்கள்

Posted by - February 20, 2023 0
கவுகாத்தி : புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மேற்பரப்பில் அதிர்வுகள் உண்டாவது உண்டு. இதுதான் நில நடுக்கம். நமது நாட்டைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு பகுதி, அதிகபட்சம் நில…

புஷ்பா 2 பட விவகாரம், தாய் அன்றே இறந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்

Posted by - December 18, 2024 0
புஷ்பா 2 நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது புஷ்பா. முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் செம மாஸாக தயாராகி கடந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *