வீடே மணமணக்கும்.. சுவையான… மெட்ராஸ் ஸ்டைல் நாட்டுக்கோழி வறுத்த கறி

207 0

செட்டிநாடு, கொங்குநாடு சமையல் மிகவும் பிரபலமானவை. நிறைய பேர் இந்த ஸ்டைல் சமையலை வீட்டில் சமைக்க விரும்புவதுண்டு. ஆனால் மெட்ராஸ் ஸ்டைல் சமையலை நீங்கள் சுவைத்துள்ளீர்களா? அதுவும் மெட்ராஸ் ஸ்டைலில் சிக்கனை சமைத்தால் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு மெட்ராஸ் ஸ்டைல் நாட்டுக்கோழி வறுத்த கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மெட்ராஸ் ஸ்டைல் நாட்டுக்கோழி வறுத்த கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மசாலாவிற்கு…

* வரமிளகாய் – 6

* மல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன்

* மிளகு – 1 டீஸ்பூன்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* வெங்காயம் – 2 கப் (நறுக்கியது)

* தக்காளி – 1/2 கப் (நறுக்கியது)

* பூண்டு – 5 பல்

* இஞ்சி – 2 இன்ச்

* பட்டை – 1 இன்ச்

* கிராம்பு – 3

* ஏலக்காய் – 1

* அன்னாசிப்பூ – 2

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

கிரேவிக்கு…

* நாட்டுக்கோழி – 1/2 கிலோ

* பிரியாணி இலை – 2

* கறிவேப்பிலை – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் நாட்டுக்கோழியை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், மல்லி விதைகள், மிளகு, சோம்பு மற்றும் சீரகம் சேர்த்து, மிதமான தீயில் வைத்து சில நிமிடங்கள் வறுக்க வேண்டும்.

* அதன் பின் அதில் வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து 3.4 நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும்.

* வெங்காயமும், தக்காளியும் நன்கு வதங்கியதும், அதில் படடை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின் வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* அடுத்து அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். சிக்கன் ஓரளவு வதங்கி வெள்ளையாகும் போது, அதில் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு ஒருசேர கிளறி விட வேண்டும்.

* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.

* சிக்கன் நன்கு வெந்து எண்ணெய் மேலே மிதந்து வரும் போது அடுப்பை அணைத்துவிட்டு, கீழே இறக்கி சிறிது கறிவேப்பிலையைத் தூவினால், சுவையான மெட்ராஸ் ஸ்டைல் நாட்டுக்கோழி வறுத்த கறி தயார்.

Related Post

திடீரென சீரியலில் இருந்து விலகிய பாக்கியலட்சுமி தொடர் புகழ் ரித்திகா- அவருக்கு பதில் யார்?

Posted by - April 21, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் பாக்கியலட்சுமி. கோபி குடிப்பழக்கத்தால் அனைவரையும் கஷ்டப்படுத்தி வர இப்போது ராதிகா பாக்கியா வீட்டிற்குள் சென்று…

ஓவியா மது குடித்துக்கொண்டே சொன்ன அட்வைஸ்! என்னனு பாருங்க

Posted by - July 29, 2024 0
நடிகை ஓவியா ஹீரோயினாக தமிழ் சினிமாவில் பாப்புலர் ஆனதை விட பிக் பாஸ் ஷோவில் பாப்புலர் ஆனது தான் அதிகம். ஓவியா ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு அவருக்கு…

குழந்தை முன் சண்டை போட்டுக்கொள்ளும் பெற்றோரா நீங்கள்..? அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் தெரிஞ்சுக்கோங்க..!

Posted by - June 3, 2023 0
பலரது வீட்டில் பொதுவாக நடக்க கூடிய பொதுவான நிகழ்வு தம்பதியருக்குள் நிகழும் கருத்து மோதல் அல்லது சண்டை. இந்த சண்டைகள் தம்பதியருக்குள் மட்டுமே நடக்கும் போது அது…

பிக் பாஸ் Voting-ல் அரசியல்வாதி தலையீடு: கொந்தளித்த முன்னாள் போட்டியாளர்

Posted by - January 18, 2023 0
பிக் பாஸ் 6ம் சீசன் இந்த வாரத்தோடு முடியப்போகிறது. அதற்கான இறுதிக்கட்ட வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இறுதியில் டைட்டில் ஜெயிக்கப்போவது யார் என்பது வார இறுதியில்…

சாப்பிட்ட உடனே மலம் கழிக்கத் தோணுதா…? இந்த பிரச்சனைதான் காரணமாம்…

Posted by - September 18, 2024 0
காலையில் எழுந்ததும் மலம் கழித்து வயிற்றை சுத்தம் செய்த பின்னரே மற்ற வேலைகளை செய்ய வேண்டும்.ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முதலில் நாம் கவனம் செலுத்த வேண்டியது வயிறுதான்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *