வேங்கைவயல் சம்பவம் | இன்றுடன் ஓராண்டு நிறைவு: விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை

280 0

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது கடந்த ஆண்டு டிச.26-ம் தேதி தெரியவந்தது. இந்தக் கொடுஞ்செயல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில் சாட்சிகள் யாரும் இல்லாததால், குற்றவாளி களை கண்டறிய முடியவில்லை. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கைசிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதுவரை 221 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், 31 பேர்டிஎன்ஏ பரிசோதனைக்கு உட் படுத்தப்பட்டனர். அதில் இருந்து, 10 பேரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், யாரும் கைது செய்யப்படாததால், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடிபோலீஸார் கூறும்போது, “குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் நேரடி சாட்சியாரும் இல்லாததால் அறிவியல்பூர்வமான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படும் நபர்களை அடுத்தடுத்த கட்ட உயர் தொழில்நுட்ப விசாரணைக்கு உட்படுத்தி விசாரித்து வருகிறோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றனர். சர்வதேச அளவில் விமர்சனத்துக்கு உள்ளான இந்த சம்பவம் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது அனைத்துத் தரப்பினரையும் கவலையடையச் செய்துள்ளது.

Related Post

இந்த வருடமும் நாங்க தான்.. சம்பவம் செய்த மாணவிகள்-தேர்ச்சி விகிதம் இது தான்

Posted by - May 8, 2025 0
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விட அதிக சதவீகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் 12 ஆம்…

போட்டி போட்டு ட்ரெண்ட் செய்யும் மத்திய மாநில ஆளும் கட்சிகள்.. பந்தயத்துக்கு நாங்க வரலாமா, TVKForTN

Posted by - February 22, 2025 0
சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதுவும்  கெட் அவுட் மோடி என்ற ஹாஷ் டேக் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்தது. திமுக கட்சியினருக்கு…

தமிழக முதலமைச்சரிடம் கஞ்சா பொட்டலத்துடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர்… மதுரையில் திடீர் பரபரப்பு

Posted by - April 30, 2024 0
கஞ்சா பொட்டலத்துடன் முதலமைச்சரிடம் மனு கொடுக்க பாஜக நிர்வாகி ஒருவர் ஓடிவந்தார். உடனே அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். தமிழ்நாடு…

“அதிமுக வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது.. அரசியலில் பக்குவப்படவில்லை” – கடம்பூர் ராஜூ விமர்சனம்

Posted by - March 8, 2023 0
ஒன்றிய அரசு என்று கூறும் திமுகவிற்கு எதிராக பேசி தான் வருகிறார் தவிர எந்த எதிர்வினையும் அவர் ஆற்றவில்லை என கடம்பூர் ராஜூ கேள்வி தானாக விரும்பி…

தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் சாம்சங் தொழிலாளர்களை போராட விடு – வைரலாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ட்வீட்..!!

Posted by - October 10, 2024 0
தங்கள் உரிமை கேட்டுப் போராடும் சாம்சங் தொழிலாளர்களை போராட விடுங்கள் என பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள செய்தியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *