அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்

209 0

மதுரையில் காவலர் கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

மதுரையில் துப்பாக்கிச் சூடு:

மதுரை ஈச்சனேரியை  சேர்ந்த தனிப்படை காவலர் மலையரசனின் உடல் எரிந்த நிலையில் கடந்த 19ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளியை தேடி வந்த போலீசார், மூவேந்திரன் என்பவரை சுட்டுப் பிடித்தனர். இதையடுத்து அவர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுற்றி வளைத்தபோது  சார்பு ஆய்வாளர் மாரி கண்ணனை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணையில் தனது ஆட்டோவில் பயணித்த மலையரசனிடம் இருந்த பணத்திற்காக, அவரை மூவேந்திரன் கொலை செய்ததாக காவல்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

பணத்திற்காக தான் கொலையா?

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்த மலையரசன் (36) இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தனிப்படை காவலராக 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பாண்டிசெல்வி (33) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகளுடன் காவலர் குடியிருப்பில் வசித்துவந்தார். இந்நிலையில் கடந்த  சில நாட்களுக்கு முன்பாக உறவினரினர் சுபநிகழ்வுக்கு பைக் மூலமாக சென்றுவிட்டு மானாமதுரை கட்டனூர் பிரிவில் வந்துகொண்டிருந்தபோது மற்றொரு வாகனம் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த மலையரசனின் மனைவி பாண்டிசெல்வி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தான் மலையரசனும் கொல்லப்பட்டு இருக்கிறார். இதனால் இது உண்மையிலேயே பணத்துக்கான கொலை தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு

கடலூர் மற்றும் சென்னையை தொடர்ந்து தற்போது மதுரையிலும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி குற்றவாளியை கைது செய்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் தமிழக போலீசார் நடத்திய மூன்றாவது துப்பாக்கிச் சூடு இதுவாகும்.

கடந்த 20ம் தேதி  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சித்திரப்பாடியில் தப்பியோட முயன்ற  கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். ஸ்டீபன் என்ற கொள்ளையனை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரை தாக்கிவிட்டு கொள்ளையன் தப்பிச் செல்ல முயன்றதால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியானது.  அவர் மீது திருச்சி, நாகை, தஞ்சை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 25-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனைதொடர்ந்து, கடந்த 21ம் தேதி தூத்துக்குடியை சேர்ந்த ஹைகோர்ட் மகாராஜா எனும் ரவுடி, சென்னை ஆதம்பாக்கத்தில் மறைந்து இருந்தபோது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தப்பிக்க முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் , அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Post

வர்த்தக சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்ந்தது- ரூ.1945-க்கு விற்பனை

Posted by - July 1, 2023 0
சென்னை: பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப விலை…

வடிவேல் பட பாணியில் ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி காரை அபேஸ் செய்த ஆசாமி!

Posted by - July 24, 2025 0
கும்பகோணத்தில் வடிவேல் பட பாணியில், காரை ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி கார் திருடி செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர்,…

தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்… கனிமொழிக்கு அண்ணாமலை பதில்…!

Posted by - April 28, 2023 0
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துககொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்திய விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை…

இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!

Posted by - December 31, 2024 0
தமிழக மக்களுக்காக நடைபெற்ற அதிமுக ஆட்சியை மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று ஜீபூம்பா செய்து ஆட்சியை பிடித்து விட்டார். சிறைச்சாலை அதிமுகவினருக்காக கட்டப்பட்டது. நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை,…

திருடச்சென்ற வீட்டில் பிரியாணி, மது சாப்பிட்டு தூக்கம்போட்ட வாலிபர்

Posted by - February 17, 2023 0
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் நேற்று காலை வேலை நிமிர்த்தமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மதிய நேரத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *