அமைச்சர் மெய்யநாதனை புறக்கணிக்கிறாரா அமைச்சர் ரகுபதி?

168 0

புதுக்கோட்டை மாவட்ட திமுக-வில் அமைச்சர்கள் ரகுபதியும் சிவ.வீ.மெய்யநாதனும் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பவர்கள். இதில், ரகுபதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பதால் கூடுதல் அதிகாரத்துடன் கோலோச்சி வருகிறார். இதனால் அவரது மாவட்டத்துக்கு உட்பட்ட ஆலங்குடி தொகுதியின் எம்எல்ஏ-வான அமைச்சர் மெய்யநாதனை ரகுபதி தரப்பு திட்டமிட்டு புறக்கணித்து வருவதாகச் சொல்கிறார்கள்.

​மாவட்ட திமுக சார்​பில் நடத்​தப்​படும் நிகழ்ச்​சிகளில் மெய்​ய​நாதனின் பெயரும் படமும் திட்​ட​மிட்டு இருட்​டடிப்பு செய்​யப்​படு​வ​தாக நீண்ட கால​மாகவே புகைச்​சல் உண்​டு. சில மாதங்​களுக்கு முன்​பு, பட்​ஜெட்​டில் தமி​ழ​கத்​துக்கு போதிய நிதியை ஒதுக்​காத மத்​திய அரசைக் கண்​டித்து அறந்தாங்கி​யில் ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​யது திமுக. இதற்​காக முதலில் அச்​சடிக்​கப்​பட்ட போஸ்​டரில் அமைச்​சர் மெய்​ய​நாதன் படமோ பெயரோ இல்லை. அதன் பிறகு இதைச் சுட்​டிக்​காட்​டிய பிறகு மெய்​ய​நாதனின் படமும் பெயரும் போஸ்​டரில் சேர்க்​கப்​பட்​டது.

இதே​போல், ஜூலை மாதம் புதுக்​கோட்​டை​யில் தெற்கு மாவட்ட திமுக வாக்​குச்​சாவடி முகவர்​கள் கூட்​டம் நடந்​தது. அதற்​கான மேடை​யில் வைக்கப்​பட்ட ஃபிளெக்​ஸில் மெய்​ய​நாதனின் படத்தை போடா​மல் விட்​டார்​கள். இதைப் பார்த்​து​விட்டு அவரது ஆதர​வாளர்​கள் இருக்​கையை விட்டு எழுந்து சென்று மண்டல பொறுப்​பாள​ரும் அமைச்​சரு​மான கே.என்​.நேரு​விடம் உரிமைக் குரல் எழுப்​பினர். அப்​போது அவர்​களை சமாதனப்படுத்துவதற்​குள் பெரும்​பாடு பட்​டுப்​போ​னார் நேரு. “இனிமேல் இப்​படி நடக்​காமல் பார்த்​துக் கொள்​கிறேன்” என்று அவர் உத்​தர​வாதம் அளித்த பிறகே மெய்​ய​நாதன் விசு​வாசிகள் அமை​தி​யா​னார்​கள்.ஆனாலும் நிலைமை மாற​வில்​லை. அண்​மை​யில் புதுக்​கோட்​டை​யில் திமுக சட்​டத்​துறை பயிற்சி பாசறைக் கூட்​டம் நடந்​தது. இதில் பங்​கேற்​றவர்​களுக்கு தரப்​பட்ட அடை​யாள அட்​டை​யில் ரகுபதி படம் மட்​டுமே இருந்​தது; மெய்​ய​நாதன் படம் இல்​லை. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்த மெய்​ய​நாதன் ஆதர​வாளர்​கள் சிலர், அடை​யாள அட்​டைகளை அணிந்​து​கொள்ள மறுத்து ஆட்​சேபனை செய்​தனர்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய மெய்​ய​நாதனின் ஆதர​வாள​ரான தெற்கு மாவட்ட நிர்​வாகி ஒரு​வர், “கடந்த கால் நூற்​றாண்​டாக ஊராட்சி மன்​றத் தலைவர், ஒன்​றியக் கவுன்​சிலர், ஒன்​றியக் குழுத் தலை​வர், எம்​எல்ஏ என போட்​டி​யிடும் அனைத்​துத் தேர்​தல்​களி​லும் வெற்றி பெற்று வரு​கி​றார் மெய்​ய​நாதன். 2021 தேர்​தலில் மாவட்​டத்​திலேயே அதிக வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஒரே எம்​எல்ஏ மெய்​ய​நாதன் தான்.

கட்​சிப் பணி​யிலும் மக்​கள் சேவை​யிலும் அவருக்கு இணை​யாக யாரை​யும் இங்கு சொல்​ல​முடி​யாது. அப்​படிப்​பட்​ட​வரை ரகுபதி தரப்​பினர் ஏனோ தெரிய​வில்லை திட்​ட​மிட்டு புறக்​கணிக்க நினைக்​கி​றார்​கள். ரகுபதி சொல்லி இப்​படிச் செய்​கி​றார்​களா அல்​லது அவர் சந்​தோஷப்​படு​வார் என நினைத்து இவர்​களாகவே இப்​படிச் செய்​கி​றார்​களா என்​றும் தெரிய​வில்​லை.

இத்​தனைக்​கும் தெற்கு மாவட்​டத்​தில் தான் ரகுபதி மற்​றும் மெய்​ய​நாதனின் தொகு​தி​கள் வரு​கின்​றன. ஆனால், கட்​சிக் கூட்​டம் என்​றாலே தெற்கு மாவட்​டச் செய​லா​ள​ராக இருப்​ப​தால் ரகுப​தியை மட்​டுமே முன்​னிலைப்​படுத்​துகி​றார்​கள். வாக்​குச் சாவடி முகவர்​கள் கூட்​டத்​தில் அமைச்​சர் நேருவிடம் மெய்​ய​நாதனை புறக்​கணிப்​பது குறித்து காட்​ட​மாகவே கேள்வி கேட்​டோம். “இந்த பிரச்​சினை இனிமேல் வரா​து” என்​றார். ஆனால், மறுபடி​யும் அதையே செய்​திருக்​கி​றார்​கள்.

2016-ல் வெற்​றி​பெற்று எதிர்க்​கட்சி எம்​எல்​ஏ-​வாக இருந்​தவர் மெய்​ய​நாதன். 2021 தேர்​தலில் அவரை வேட்​பாளர் பரிசீலனைக்கு கொண்டு வரவே சிலருக்கு விருப்​பமில்​லை. கடைசி​யில், அமைச்​சர் நேரு பார்த்​து​விட்டு சம்​பந்​தப்​பட்​ட​வர்​களை கடிந்து கொண்​டதுடன் மெய்​ய​நாதனின் பெயரை​யும் உள்ளே கொண்டு வந்​தார்.

இத்​தனை நெருக்​கடிகளை​யும் தாண்டி தேர்​தலில் வென்று அமைச்​ச​ராகி மக்​கள் மத்​தி​யில் மெய்​ய​நாதன் பெயரெடுத்து வரு​வதை ஜீரணிக்க முடியாதவர்​கள் அவரை எப்​படி​யெல்​லாமோ இருட்​டடிப்பு செய்​கி​றார்​கள். சீப்பை எடுத்து மறைத்து வைத்​து​விட்​டால் கல்​யாணம் நின்று போய்விடுமா என்​ன?” என்​றார்​.

Related Post

tvk aiadmk

TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?

Posted by - May 28, 2026 0
தமிழக வெற்றிக் கழகத்தில் அடுத்தடுத்து அதிமுக-வின் முன்னாள் எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் இணைவது தவெக கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒவ்வொரு…
Generated Image November 13 2025 5 02PM

பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.?

Posted by - November 13, 2025 0
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பாக தமிழக அரசு 5ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இது சாத்தியமா.?…
Gemini Generated Image brdq6zbrdq6zbrdq

பாஜகவில் களம் இறங்கும் 27 வேட்பாளர்கள் யார்.? அண்ணாமலைக்கு இடம் இருக்கா.? உத்தேச பட்டியல் இதோ…

Posted by - March 26, 2026 0
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. தொகுதி பங்கீட்டை முடித்த அதிமுக தமிழக சட்டமன்ற…
Generated Image January 12 2026 5 19PM

கொத்து கொத்தாக வாக்குறுதி அறிவித்த இபிஎஸ்

Posted by - February 4, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பாக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி கடன் தள்ளுபடி, முதியோர் ஓய்வூதியம், மானிய விலையில் சிலிண்டர் என பல…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *