அவதியை ஏற்படுத்தப்போகும் அனல்காற்று: என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

254 0

நாட்டின் சில பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் உயர்ந்து காணப்படும் நிலையில், அடுத்து வரும் மாதங்களில் அனல்காற்று அதிக அவதியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அதுகுறித்த இந்த ஆண்டின் முதலாவது எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அனல்காற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்ற பட்டியலை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.வெப்ப அலை..கோடை கால நோய்களை கண்காணியுங்கள்..எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது..மத்திய  அரசு | Centre's Health Advisory for Heatwave 2023: Avoid Tea, Track Weather  Alert - Tamil Oneindia

அதன்படி…

என்ன செய்ய வேண்டும்?

* அதிக புரதச்சத்து உணவுகளை உண்பதையும், உச்சி வேளையில் சமைப்பதையும் தவிர்க்க வேண்டும். நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயில் நேரடியாக படும்வகையில் வெளியில் நடமாட வேண்டாம்.

* போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள். தாகம் எடுக்காவிட்டாலும் தண்ணீர் குடிப்பதை தவிர்க்காதீர்கள்.

* வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட எலுமிச்சைச் சாறு பானம், மோர், லஸ்சி, சிறிது உப்பு சேர்க்கப்பட்ட பழச்சாறுகளை பருகலாம். நல்ல காற்று வசதியுள்ள, குளுமையான இடங்களில் இருக்கலாம்.

* நீர்ச்சத்து நிறைந்த தர்ப்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை உட்கொள்ளலாம். வெளிர் வண்ண, மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள். குடை, தொப்பி அல்லது தலைப்பாகையால் தலையை பாதுகாத்துக்கொள்ளுங்கள். வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம்.

* உள்ளூர் வானிலை தொடர்பான செய்திகளை வானொலி, செய்தித்தாள், டி.வி. மூலம் அறிந்துகொள்ளுங்கள். இந்திய வானிலைத் துறையின் இணையதளத்தையும் பார்க்கலாம்.

* அதிக வெயிலால் ஏற்படும் தலை கிறுகிறுப்பு, மயக்கம், குமட்டல், வாந்தி, தலைவலி, அதீத தாகம், அடர்மஞ்சள் நிறத்தில் குறைவாக சிறுநீர் கழிப்பது, வேகமாக மூச்சு வாங்குதல், அதிவேக இதயத்துடிப்பு குறித்து கவனமாக இருங்கள்.

* யாராவது ஒருவர் அதிக உடல் வெப்பநிலை, மயக்கம், குழப்பநிலையில் காணப்பட்டால், வியர்ப்பது நின்றுவிட்டால் உடனடியாக 108, 102 எண்களை உதவிக்கு அழையுங்கள்.

* அனல்காற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய கைக்குழந்தைகள், இளஞ்சிறார்கள், கர்ப்பிணிகள், திறந்தவெளியில் பணிபுரிவோர், மாற்றுத்திறனாளிகள், மனநல பாதிப்பு உடையோர், அதிக ரத்த அழுத்தம், இதயநோய் பிரச்சினை உள்ளவர்கள், குளிர்ந்த பகுதிகளில் இருந்து வெப்பமான பகுதிகளுக்கு வருபவர்கள் ஆகியோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

என்ன செய்யக்கூடாது?

* நிறுத்தப்பட்ட கார் போன்ற வாகனங்களுக்குள் குழந்தைகள், செல்லப்பிராணிகளை விட்டுச் செல்லாதீர்கள். அப்போது அந்த வாகனங்களுக்குள், அதிகமான வெப்பம் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

* நேரடியாக வெயில், வெப்ப அலை தாக்குதலை தவிருங்கள். பகல் வேளையில் ஜன்னல்கள், திரைச்சீலைகளை மூடிவையுங்கள். குறிப்பாக, உங்கள் வீட்டில் வெயில் தாக்கும் பகுதியில் இரவில், குளிர்ந்த காற்று உள்ளே வரும் வகையில் ஜன்னல்களை கொஞ்சம் திறந்துவைக்கலாம்.

* வெளியில் செல்லவேண்டியிருந்தால், வெயில் தாக்கம் அதிகமில்லாத காலை அல்லது மாலை வேளையில் செல்லுங்கள். உச்சி வேளையில் வெளியில் செல்வதைத் தவிருங்கள்.

Related Post

யூ டியூபர் டிடிஎஃப் வாசன் ஜாமினில் விடுதலை: மீண்டும் பைக் ஓட்டுவேன் என்கிறார்

Posted by - November 4, 2023 0
பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடி எஃப் வாசன் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றை…

துணிவு இருந்தால்… – அஜித் படத்துக்கு ஆதரவாக மாறிய கருணாநிதி ட்வீட்- கொண்டாடும் ரசிகர்கள்

Posted by - January 9, 2023 0
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ட்வீட் ஒன்றை அஜித் ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர் துணிவு படம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்துக்கான புரமோஷன்கள்…

யூடியூப் மூலம் செல்வத்தை அடைந்த இர்பான்: இதுதான் அவரது வெற்றி!

Posted by - November 26, 2024 0
தமிழகத்தில் யூடியூப் மூலம் பிரபலம் மற்றும் பொருளாதார வெற்றியை அடைந்த பலர் உள்ளனர், இதில் Mohamed Irfan (இர்பான்) முக்கியமானவர். இவர் 2009 ஆம் ஆண்டு தனது…

பிடிஆர் வசமாகும் 2 முக்கிய இலாகாக்கள்..! ஸ்டாலின் புது கணக்கு – ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?

Posted by - April 25, 2025 0
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு புதிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.…

#Chennai உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை!

Posted by - October 15, 2024 0
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அத்தியாவசியத் துறைகள் தவிர இதர அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை(அக். 16) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *