இந்தியாவின் UPI இனிமேல் பிரான்ஸில் பயன்படுத்தலாம்: பிரதமர் மோடி தகவல்

346 0

இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி இந்திய நேரப்படி நேற்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான், பிரதமர் எலிசபெத் போர்ன், செனட் சபை தலைவர் ஆகியோரை சந்தித்தார்.

மேலும், புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் இந்திய மக்களிடையே உரையாற்றினார். அப்போது இந்தியாவின் வெற்றிகரமான பணபரிமாற்ற சேவை UPI-ஐ இனிமேல் பிரான்சில பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.UPI: How to use UPI, how set up UPI, transfer money via UPI and more. Read  all about it

இந்தியா- பிரான்ஸ் UPI பயன்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். பிரான்சின் ஈபிள் டவரில் இருந்து இந்த முறை தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுலா செல்லும் மக்கள் கையில் பணத்துடன் செல்ல வேண்டாம். UPI பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்.

இந்தியாவின் UPI பல வங்கி கணக்குகளை சிங்கிள் மொபைல் அப்ளிகேசன் மூலம் எளிதாக கையளாமுடியும். 2016-ம் ஆணடு என்.சி.பி.ஐ. 21 வங்கிகளுடன் UPI முறையை தொடங்கியது. தற்போது அசுர வளர்ச்சி அடைந்து, பொதுமக்கள் ஐந்து ரூபாய் முதல 10 ரூபாய் என டீ அருந்துவதற்குக் கூட UPI பயன்படுத்தி வருகிறாரக்ள். கடந்த 2022-ல் என்.பி.சி.ஐ. பிரான்ஸ் உடன் வேகம் மற்றும் பாதுகாப்பு ஆன்லைன் பணபரிவர்த்தனை சிஸ்டம் தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. அதற்கு லைரா எனப் பெயரிட்டிருந்தது. இந்த வருடம் சிங்கப்பூர் PayNow உடன் பயனர்கள் நாடு கடந்த பரிவர்த்தனைக்கு அனுமதிப்பது தொடர்பான ஒப்பந்தம் செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், பூடான், நேபாளத்தில் UPI முறை நடைமுறையில் உள்ளது.

Related Post

வெப்பமயமாவதால் கடல் மட்டம் உயருகிறது- சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு ஆபத்து

Posted by - March 14, 2023 0
திருப்பதி: கடல் வெப்பநிலையை கணக்கிடுவது 1900ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. பல தசாப்தங்களாக இந்த வெப்பம் அதிகரித்து வருகிறது. 1901க்குப் பிறகு அது மேலும் மேலும் அதிகரித்தது. கடந்த…

இந்தியாவில் 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள், குழந்தைகள் மாயம்… `பகீர்’ கிளப்பும் NCRB ரிப்போர்ட்!

Posted by - August 1, 2023 0
இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள், கடத்தல் மற்றும் கொலைக் குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்திருப்பது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை…

போன் தொலைஞ்சா, அக்கவுண்ட்ல காசு காணாம போனா இனி போலீசுக்கு போக வேண்டாம்.. இந்த நம்பருக்கு ஒரு கால் போதும்

Posted by - July 31, 2024 0
Cybercrime: சைபர் கிரைம் தற்போது இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பணப்பரிவர்த்தனை எல்லாம் டிஜிட்டல் மயமானதிலிருந்து அக்கவுண்டில் இருந்து பணம்…

பெண் டாக்டரின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டதாக பேஸ்புக் நிறுவனம் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு

Posted by - August 22, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் மனநல மருத்துவர் ஒருவரின் பேஸ்புக் பக்கத்தை யாரோ மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர். பின்பு அந்த டாக்டரின் ஆபாசமான படங்களை…

வடமாநிலங்களில் நிலநடுக்கம்: பதற்றத்தில் தவித்த மக்கள்

Posted by - February 20, 2023 0
கவுகாத்தி : புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மேற்பரப்பில் அதிர்வுகள் உண்டாவது உண்டு. இதுதான் நில நடுக்கம். நமது நாட்டைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு பகுதி, அதிகபட்சம் நில…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *