இந்த நிகழ்ச்சி நடக்காமலேயே இருந்திருக்கலாம்.. ஏ.ஆர்.ரகுமான் கான்சர்ட்டால் ரசிகர்கள் அதிருப்தி

202 0

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதையடுத்து ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி ஏற்பாடுகள் மோசம்: ரசிகர்கள்  அதிருப்தி | AR Rahman s Marakuma Nenjam Concert organisation worst disaster  Fans Displeased ...
ஆனால் அன்றைய தினம் பெய்த மழையால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 10-ஆம் தேதி இந்த நிகழ்ச்சி மீண்டும் நடைபெறும் என்றும் முன்பு வாங்கிய டிக்கெட்டுகள் இதற்கு செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சி நடைபெறாமலேயே இருந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அதாவது, இருபதாயிரம் போர் அமரக்கூடிய இடத்தில் ஐம்பதாயிரம் பேர் இருந்ததாகவும் ரூ.50,000 டிக்கெட் வாங்கியவர்கள் இருக்கும் இடத்தில் சாதாரண டிக்கெட் வாங்கியவர்கள் இருந்ததாகவும் ரசிகர்கள் கூறினர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாடு சரியில்லை. குடிக்க தண்ணீர் இல்லை, சரியான கார்பார்க்கிங் இல்லை இப்படியான ஒரு நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்திருக்கலாம் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பல ரசிகர்கள் போக்குவரத்து நெரிசலால் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Post

’லியோ’ திரைபார்வை..

Posted by - October 20, 2023 0
’லியோ’ விமர்சனம்: விஜய்-லோகேஷ் கூட்டணியின் மாயாஜாலம் பலித்ததா? LEO movie review: Despite mixed reviews from audience, Thalapathy Vijay’s film mints ₹132.5 cr…

ரீ-ரிலீஸ் ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் படையப்பா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - December 10, 2025 0
படையப்பா கே. ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 1999ஆம் ஆண்டு வெளிவந்த படம் படையப்பா. இப்படத்தில் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, நாசர், மணிவண்ணன்,…

துணிவு ‘சில்லா சில்லா’ வெளியானது.. ரசிகர்கள் கொண்டாடும் பாடல் இதோ

Posted by - December 9, 2022 0
துணிவு படத்தின் முதல் சிங்கிள் “சில்லா சில்லா” பாடல் வீடியோ வெளியாகி இருக்கிறது. வெறித்தனமாக காத்திருந்த ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.  

”கண்ணை நம்பாதே” திரை பார்வை..

Posted by - March 18, 2023 0
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மு. மாறன் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் கண்ணை நம்பாதே. திரில்லர் கதைக்களத்தில் உதயநிதி எப்படி நடித்துள்ளார் என்பதை பார்ப்பதற்காகவே இப்படத்தின்…

“இனி நடிக்கமாட்டேன்” அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

Posted by - January 10, 2025 0
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் அஜித். இவரது நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன. இந்த நிலையில், நடிகர் அஜித் துபாயில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *