ஈபிஎஸ் vs அண்ணாமலை : உழைக்காமல் தலைவரான ஒரே நபர்.. எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து முதலமைச்சரானவர் .. வலுக்கும் வார்த்தைபோர்

215 0

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையேயான வார்த்தைப் போர் மீண்டும் வலுத்துள்ளது.

கூட்டணியில் இருந்தபோது அதிமுக நல்ல கட்சியாகத் தெரிந்த அண்ணாமலைக்கு கூட்டணியிலிருந்து விலகிய பிறகு அதிமுக கெட்ட கட்சியாகிவிட்டதா எனவும் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டணியில் இருந்து பிரிந்த பின்னர், அதிமுக மற்றும் பாஜக இடையே தொடர்ந்து கருத்து மோதல் நீடித்து வரும் நிலையில், தலைவர் பதவிக்கு யாருக்கு தகுதி இல்லை என எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் ஒருவரை ஒருவர் காட்டமாக விமர்சித்துள்ளனர்.

இதே போல, கூட்டணி விவகாரத்திலும் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக சாடிய நிலையில், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதற்கான காரணத்தை முதல்முறையாக பொதுவெளியில் உடைத்துள்ளார் அண்ணாமலை… திமுக – பாஜக இடையே ரகசிய உறவு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சிக்க, அதற்கும் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.உழைக்காமல் தலைவரான ஒரே நபர், அண்ணாமலைதான் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ள நிலையில், எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து முதலமைச்சரானவர்தான் எடப்பாடி பழனிசாமி என அண்ணாமலை பதில் அளித்துள்ளார். அரசியலில் எப்படி செயல்படவேண்டும் என தனக்கு எடப்பாடி பழனிசாமி பாடம் எடுக்கவேண்டாம் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் நேரடியாக ஒருவர் மீது ஒருவர் காரசாரமாக விமர்சித்திருப்பது தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

அமோனியா வாயு கசிவு விவகாரம்… அறிக்கை வெளியிட்ட நிறுவனம்

Posted by - December 27, 2023 0
சென்னை: சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு…

பொறுப்புக்கு வரும் பொன்முடி; வாயை கட்டுவதாக வாக்குறுதி…

Posted by - June 25, 2025 0
வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டு, கட்சியிலும், அரசிலும் பதவிகளை இழந்த பொன்முடி, மு.க. ஸ்டாலினை சமாதானம் செய்துவிட்டதாகவும், அதனால் அவர் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.…

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள், வாகன வசதி- ஊர் பொதுமக்கள் அறிவிப்பு

Posted by - April 13, 2023 0
சிவகிரி: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ளது மாரப்பம்பாளையம். இந்த ஊரில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த…

சவுமியா அன்புமணி வெற்றிக்காக உழைக்கும் மகள்கள்!

Posted by - April 10, 2024 0
தருமபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுகிறார். அவரது மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் அம்மாவுக்காக ஆதரவு திரட்டி வருகின்றனர். முதல் மகளான…

“எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் விடாமல்..” – எஃப்ஐஆரில் வெளிவந்த ஞானசேகரனின் கோர முகம்!

Posted by - December 26, 2024 0
பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த விவகாரத்தில் பிரியாணி வியாபாரியாக உள்ள ஞானசேகரன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *