பொறுப்புக்கு வரும் பொன்முடி; வாயை கட்டுவதாக வாக்குறுதி…

151 0

வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டு, கட்சியிலும், அரசிலும் பதவிகளை இழந்த பொன்முடி, மு.க. ஸ்டாலினை சமாதானம் செய்துவிட்டதாகவும், அதனால் அவர் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்சிப் பதவியையும், அமைச்சர் பதவியையும் இழந்து நிற்கும் பொன்முடியின் கிராஃப் மீண்டும் உயர ஆரம்பித்துள்ளதாகவும், அவருக்கு மீண்டும் ஒரு பதவியை கொடுக்க ஸ்டாலின் இறங்கி வந்துள்ளதாகவும் சொல்கின்றனர். அது குறித்து தற்போது பார்க்கலாம்.

பொன்முடிக்கு மீண்டும் கட்சிப் பதவி

திமுகவில் முக்கிய புள்ளியாக வலம் வந்த பொன்முடி, தனது சர்ச்சையான கருத்துகளாலேயே சரிவை சந்தித்தார். அதோடு சேர்த்து, விழுப்புரத்தில் முடிசூடா மன்னனாக இருந்த அவரது செல்வாக்கும் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. அந்த இடத்தை பயன்படுத்திக் கொண்டு விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் வளர ஆரம்பித்தார். விழுப்புரம் கட்சி நிகழ்ச்சி பேனர்களில் கூட பொன்முடியும் புகைப்படம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும், என்னதான் விழுப்புரத்தில் லட்சுமணன் கொடிகட்டிப் பறந்தாலும், திமுக தலைமையிடம் பொன்முடியை தாண்டி அவரால் எதையும் சாதிக்க முடியாமல் திணறுகிறாராம்.

துணை பொதுச்செயலாளர், அமைச்சர் என அனைத்து பதவிகளையும் இழந்ததால் தான் விழுப்புரத்தில் பொன்முடியின் செல்வாக்கு குறைவதாக அவரது ஆதரவாளர்கள் புலம்பி வந்தனர். ஆனால் பதவிகளை இழந்தாலும், பொன்முடி கட்சி தொடர்பாக அவதூறான கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை. கட்சி நிகழ்ச்சிகளையும் தவிர்க்காமல் கலந்து கொண்டார். இனி இப்படி எதுவும் சர்ச்சையாக பேச மாட்டேன் என ஸ்டாலினிடம் அவர் உறுதி கொடுத்து சமரசமாக போய்விட்டதாகவும் பேச்சு இருக்கிறது.

தலைமையிடம் உயர்ந்த செல்வாக்கு

ஜூன் 3ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின், கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது பொன்முடியும் அவருடன் வந்திருந்தார். இப்படி திமுக தலைமையிடம் பொன்முடியின் கிராஃப் மீண்டும் உயர ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், விழுப்புரத்தின் அடையாளமாக, கட்சியின் உயர் பதவிகளில் பொன்முடி இருக்க வேண்டும் என்று திமுகவினர் விரும்புகின்றனர். அந்த இடத்தை பிடித்து அமைச்சரவையில் நுழைய லட்சுமணன் முயற்சி செய்தாலும், பொன்முடியின் அனுபவத்தையும், கட்சித் தலைமையுடனான நெருக்கத்தையும் தாண்டி, அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை என்ற பேச்சு இருக்கிறது. விழுப்புரத்தில் லட்சுமணன் கைகள் ஓங்கினாலும், பொன்முடி விவகாரத்தில் அவர் மீது தலைமையிடம் புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிகிறது.

ஸ்டாலினின் முக்கிய முடிவு

இந்த நிலையில், பொன்முடியிடம் மீண்டும் தலைமைக் கழக பொறுப்பை ஒப்படைக்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக சொல்கின்றனர். துணை பொதுச்செயலாளர் பதவியின் எண்ணிக்கையை அதிகரித்து, மீண்டும் அவருடையே பதவியையே கொடுக்கலாமா அல்லது புதிதாக பதவி உருவாக்கி கொடுக்கலாமா என ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக, அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.

எப்படியோ, மறுபடியும் கட்சியில் பதவியை பிடிக்கப்போகும் பொன்முடி, மீண்டும் சர்சைகளில் சிக்காமல், வாயை கட்டி வைத்தால் நன்றாக இருக்கும் என்பதே, திமுக தொண்டர்கள், குறிப்பாக பொன்முடியின் ஆதரவாளர்களின் வேண்டுதலாக உள்ளது.

 

Related Post

தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் 44 பேர் கைது

Posted by - November 9, 2023 0
புதுடெல்லி: வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை, ஒரு கும்பல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமைகளாக விற்பனை செய்துள்ளனர். அவர்களுக்கு இந்தியாவை சேர்ந்தவர்களை…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

Posted by - January 1, 2023 0
தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அரசின்…

உரையை வாசிக்காமலேயே வெளியேறிய ஆளுநர் – சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

Posted by - January 6, 2025 0
ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களிடம், ”தேசிய கீதம் இசைக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு அவமரியாதை செய்யக்கூடாது. அமைதியாக இருங்கள்” என்று…
weather

“தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!” – வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்; லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?

Posted by - May 1, 2026 0
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில்…

சிறியாநங்கை.. பல நோய்களின் எதிரி சிறியா நங்கை.. சர்க்கரை நோயாளிகளே நோட் பண்ணிக்குங்க.. சூப்பர் மூலிகை

Posted by - November 3, 2023 0
சென்னை: ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் வளர்க்கப்பட வேண்டிய மூலிகைகளில் ஒன்றுதான் சிறியாநங்கை.. ஆச்சரியத்தக்க மருத்துவ குணங்களை கொண்டது இந்த செடி. நிலவேம்பு செடியை, சிறியாநங்கை என்று சொல்வார்கள்..…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *