”உதயநிதி படத்தை பார்க்க சொல்லாதீங்க” விஜய்யின் வாரிசு படம் குறித்து மறைமுகமாக பேசிய அண்ணாமலை!

295 0

தூங்குவது முதல் காலை எழுவது வரை திராவிட மாடல் என்று முதல்வர் கூறி வருவதாக அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்றால் ஆக்கிவிடுங்கள் ஆனால் அதற்காக அவர் நடித்த படங்களை பார்க்க சொல்லாதீர்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில் மாற்றத்திற்கான மாநாடு நேஷனல் பொறியியல் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, தூத்துக்குடி வடக்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கி இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். தேர்தல் வர இன்னும் 17 மாதங்கள் உள்ளது. அப்போது மொத்தம் 400 இடங்களை பெற்று மீண்டும் மோடி பிரதமராக வருவார். தமிழக அரசின் செயல்பாட்டில் கோளாறு உள்ளது.

தமிழகத்தில் நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு உள்ளது. திமுக அரசுக்கு நிர்வாக கோளாறு உள்ளது. மொத்தமாக அறிவாலய அரசு கோளாறு தான். தமிழக முதல்வர் இன்றைக்கு அடிக்கடி பேசுக்கூடிய வார்த்தை திராவிட மாடல். இதுவரை யாரும் திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்கவில்லை. தூங்குவது முதல் காலை எழுவது வரை திராவிட மாடல் என்று கூறி வருகிறார் முதல்வர்.

ஒரு படத்தில் நடிகர் வடிவேலு கிணற்றை காணும் என்பது போல, மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட மரப்பாலத்தை காணவில்லை. முதல்வரின் சொந்த தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்றால் ஆக்கிவிடுங்கள்…. ஆனால் அதற்காக அவர் நடித்த படங்களை பார்க்க சொல்லாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் இன்றையக்கு திரைப்படம் எடுப்பது, நடிப்பது எல்லாம் அவர்கள் தான். பெரிய நடிகர்கள் திரைப்படம் வெளியிட முடியாத நிலை உள்ளது. அதை வரும் பொங்கலுக்கு மக்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் என வாரிசு படத்தை குறிப்பிட்டு அண்ணாமலை பேசினார்.

Related Post

மேடையில் அமித் ஷா அப்படி என்ன சொன்னார்? தமிழிசை அளித்த பதில்

Posted by - June 13, 2024 0
ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழாவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசையை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.…

பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் – தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?

Posted by - July 29, 2025 0
மத்திய பாஜக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்து இருப்பது, தமிழ்நாடு அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி ஓ.பன்னீர்…

”தமிழர்களின் மீதான வன்மம், அற்ப அரசியல் செய்யும் மோடி” முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

Posted by - October 31, 2025 0
நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே, பிரதமர் மோடி மறந்து விடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். MK Stalin ON PM Modi: பிரதமர் மோடி…

இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்!

Posted by - April 11, 2026 0
திமுக – அதிமுக கட்சிகளிடையே தொடரும் தாக்குதல் பாணி பிரச்சாரமானது தமிழக தேர்தல் களத்தை 4 முனைப் போட்டி என்ற நிலையில் இருந்து இருமுனைப் போட்டிக்கு நகர்த்தி…

கவுன்சிலர் டூ பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்… யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

Posted by - July 6, 2024 0
தலித் மக்களின் குரலாக திகழ்ந்தவர், ஒட்டுமொத்த சென்னையே பேசும் அளவுக்கு வளர்ந்துள்ள ஆம்ஸ்ட்ராங் யார்? சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகனான ஆம்ஸ்ட்ராங், பள்ளிக் காலம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *