எதிர்ப்பை மீறி காதல் திருமணம்: மருமகனை விருந்துக்கு அழைத்து சென்று காரில் இருந்து தள்ளிவிட்ட மாமனார்

270 0

திருமங்கலம்:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர் தனது குடும்பத்தினருடன் மதுரை கே.கே.நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் பிரியவரதன் (வயது 22). இவரும், மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள சாத்தங்குடியை சேர்ந்த ஜீவானந்தம் மகள் சினேகா (21) என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் பிள்ளைகளின் காதலை ஏற்க மறுத்து விட்டனர். பெற்றோர் சம்மதத்துடன் தங்கள் காதல் நிறைவேறாது என்று எண்ணிய காதல் ஜோடி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியது.காதல் திருமணம் யாருக்கு... களத்திர தோஷம் யாருக்கு? - திருமண தடை நீங்க  பரிகாரம் | Kalathra Dosham and remedies - Tamil Oneindia

பின்னர் அவர்கள் கோவையில் பெற்றோருக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அங்கேயே ஒரு வாடகை வீட்டில் தனிக்குடித்தனமும் வசித்து வந்தனர். சில மாதங்கள் கழித்து இரு வீட்டாருக்கும் இதுகுறித்து தெரியவந்தது. இந்த நிலையில் மகனை வீட்டிற்கு வருமாறு அவரது தந்தை மணி அழைத்தார். ஒரு வழியாக தங்களது திருமணத்திற்கு சம்மதம் கிடைத்து விட்டதாக நினைத்த பிரியவரதன் மகிழ்ச்சி பெருக்கோடு தனது காதல் மனைவியுடன் வீட்டிற்கு வந்தார். அங்கு அவர்கள் 3 நாட்கள் தங்கி இருந்தனர். விருந்து, உபசரிப்பு என புதுமண ஜோடி திளைத்து போனார்கள்.

அதே சமயம் அங்கு சினேகாவின் தந்தை ஜீவானந்தம், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் 2 பேரும் அங்கு வந்தனர். அப்போது அவர்களும் தங்கள் பங்கிற்கு மருமகனையும், மகளையும் தங்கள் ஊருக்கு விருந்துக்காக அழைத்து செல்ல விரும்புதாக மணியிடம் கூறி உள்ளனர். அதற்கு சம்மதித்த மணி, மகன் பிரியவரதன், மருமகள் சினேகா ஆகியோருடன் தனது மனைவி சின்னம்மாளையும் அவர்களுடன் அனுப்பி வைத்தார். அவர்கள் காரில் சினேகாவின் சொந்த ஊரான சாத்தங்குடிக்கு புறப்பட்டனர்.

மேலஉரப்பனூர் கண்மாய் அருகே சென்றபோது காரின் வேகத்தை குறைத்து, பிரியவரதன் அவரது தாய் சின்னம்மாள் ஆகிய இருவரையும், காரில் இருந்த சினேகாவின் தந்தை ஜீவானந்தம் மற்றும் அவரது உறவினர்கள், காரில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் சுதாரிப்பதற்குள் அவர்களிடமிருந்து செல்போனையும் பறித்துக்கொண்டு சினேகாவை மட்டும் காரில் அழைத்து சென்றனர். இதையடுத்து கடத்தி செல்லப்பட்ட தனது மனைவியை மீட்டு தருமாறு திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பிரியவரதன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

முன்னாள் அமைச்சர் காலமானார்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்

Posted by - April 16, 2024 0
1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில்  சமூக நலத்துறை அமைச்சராக இந்திர குமாரி இடம்பிடித்திருந்தார்.  தொட்டில் குழந்தை திட்டம் உருவாக முக்கிய காரணமாகவும் இவர் திகழ்ந்தார். திமுக…

எங்களை இணைக்காதீங்க… எங்களை இணைச்சிடுங்க: மாறுபாடான மனுக்கள் வந்த இடம் எது தெரியுங்களா?

Posted by - January 8, 2025 0
தஞ்சாவூர் மாநகராட்சியுடன் எங்கள் கிராமம் இணைக்கப்பட்டால் 100 நாள் வேலை திட்டம் உட்பட அரசு ஏழை மக்களுக்காக அறிவிக்கும் எவ்வித திட்டங்களிலும் நாங்கள் பயன்பெற இயலாது. தஞ்சாவூர்: எங்களை…

பண வரவு முதல் தொழில் முன்னேற்றம் வரை… சந்திராதி யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்!

Posted by - December 4, 2024 0
சந்திரன் தற்போது விருச்சிக ராசியில் நுழைந்துள்ளார். வியாழன் சந்திரனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இதன் காரணமாக சந்திராதி யோகம் உருவாகியுள்ளது. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நன்மை உண்டாகப்போகிறது.…

‘இந்தி தெரியாது போடா’ என சொல்லிவிட்டு இப்ப ‘கேலோ இந்தியா’-வாம்… சூடு, சொரணை இல்லாத உதயநிதி – நடிகை விந்தியா விமர்சனம்

Posted by - January 29, 2024 0
திமுக இளைஞரணி மாநாடு பயனுள்ளதாக இல்லை என்றும், அது சர்க்கஸ் மாநாடு என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா கிண்டலடித்துள்ளார். பழனியில் முன்னாள்…

உருவானது சக்கரம்.. 4 நாளில் புயல்?! வெளுக்கும் மழை-வெதர்மேன்!

Posted by - December 4, 2022 0
தமிழக கடற்கரைரையை நோக்கி இந்திய சீன பகுதியில் இருந்து வரும் சக்கரம்  நான்கு நாட்கள் கழித்து நல்ல மழை கொடுக்க வாய்ப்புள்ளதாக வெதர்மேன் அப்டேட் போட்டுள்ளார். இந்தோ-சீனா பகுதியில் இருந்து உருவாகி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *