என்னாது கொரோனா அதிகரிக்கிறதா! அப்படிலாம் இல்லையே.. டேட்டாவுடன் வந்த கொரோனா தரவு ஆய்வாளர்

294 0

சென்னை:

தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய கொரோனா வேரியன்ட் பரவவில்லை என கொரோனா தரவு ஆய்வாளர் விஜயானந்த் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கியது. சுமார் 200 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த நோய் பரவியதால் பொருளாதார அளவில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதனால் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் கொரோனா வைரஸை உலக சுகாதார நிறுவனம் உலக பெருந்தொற்றாக அறிவித்தது.

என்னாது கொரோனா அதிகரிக்கிறதா! அப்படிலாம் இல்லையே.. டேட்டாவுடன் வந்த கொரோனா  தரவு ஆய்வாளர் | Covid Data Analyst says that no new variant in India in  last 30 days - Tamil Oneindia
இந்த பெருந்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து அனைத்து தொழில்களுமே முடங்கின. லாக்டவுன், வீட்டிலிருந்தே பணியாற்றுதல் , வேலை இழப்பு, ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு போன்ற விஷயங்கள் பொதுமக்களின் வாழ்வை புரட்டி போட்டது.

2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கடும் உச்சத்தில் இருந்த கொரோனா வைரஸ் 3 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் மீண்டும் பரவல் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தினமும் 1, 2 என்ற நிலையில் இருந்த கொரோனா தொற்று நேற்று ஒரே நாளில் 230 பேருக்கு பரவத் தொடங்கிவிட்டது.

பல மாதங்களாக 500 க்கும் குறைவாக இருந்த நிலையில் கேரளாவில் திடீரென ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 1000த்தை தொட போவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் சென்று வருகிறார்கள். அவர்கள் கொரோனாவை தொற்றி வந்துவிடுவார்களோ என்ற அச்சம் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து கொரோனா டேட்டா அனலிஸ்ட் விஜயானந்த் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா இந்தியா தரவுகளின்படி இந்தியாவில் கடந்த 30 நாட்களாக புதிய வேரியண்ட் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கெனவே இருக்கும் ஓமிக்ரான் வேரியண்ட்களான (எக்ஸ்பிபி, ஓமிக்ரான், பிஏ 2. 38) உள்ளிட்டவை காணப்படுகின்றன. எனவே பயப்படுவதற்கு எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Related Post

அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!

Posted by - December 18, 2024 0
அம்பேத்கர் பெயரை, உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம் என தவெக தலைவர் விஜய் , மத்திய அமைச்சர் அமித்சாவைக் கண்டித்துள்ளார். அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை…

கோவையில் பிரபலமான பெண் பேருந்து ஓட்டுநருக்கு சிக்கல்… போலீசார் வழக்குப்பதிவு

Posted by - February 7, 2024 0
கோவையின் பெண் பேருந்து ஓட்டுனர் என பிரபலமான சர்மிளா மீது காட்டூர் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு…

10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு..

Posted by - November 16, 2023 0
10,11,12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 01 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 08 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.பொதுத் தேர்வு அட்டவணை தீபாவளிக்கு பிறகு வெளியிடப்படும்…

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி… ஓபிஎஸ் அறிவிப்பு

Posted by - January 21, 2023 0
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக்…

அ.தி.மு.க. வழக்கில் தீர்ப்பு எப்போது? தொண்டர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிப்பு..

Posted by - January 6, 2023 0
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆவலாக உள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமா? அல்லது இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *