எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைப்பது எப்படி? இது நல்ல ஐடியாவா இருக்கே..!

178 0

புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என விரும்புபவர்கள் தற்போது மக்களுக்கு எதற்கான தேவை அதிகரித்திருக்கிறது என்பதை பொறுத்து தொழிலை அமைத்தால் எளிதாக அதில் வெற்றி பெற முடியும். அந்த வகையில் தொழில் தொடங்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாக இருக்கிறது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைப்பது.இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தொடங்கி கார்கள் வரை எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அதற்கான சார்ஜிங் நிலையங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.எனவே புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என விரும்புபவர்கள் 20 முதல் 25 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டிலேயே எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை எளிதாக அமைத்து விடலாம். மத்திய அரசு கார்பன் வெளியீட்டை குறைப்பது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்பதை ஊக்குவித்து வருவதால். இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டையும் ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவின் நெடுஞ்சாலைகள் எல்லாம் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டுக்கு உகந்த வகையில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே சரியான இடத்தை தேர்ந்தெடுத்து சார்ஜிங் நிலையங்களை அமைத்தால் அது லாபமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. சார்ஜிங் நிலையங்களை அமைப்பது தொடர்பாக மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதனை பின்பற்றினாலே நாம் எளிதாக சார்ஜிங் நிலையங்களை அமைக்க முடியும். அது மட்டும் இன்றி மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைப்பவர்களுக்கு சில குறிப்பிட்ட சலுகைகளையும் வழங்குவதாக தெரிகிறது. முதலில் சார்ஜிங் நிலையம் அமைப்பதற்கான சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.இடம் தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக பேருந்து நிலையங்களுக்கு அருகே, மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றில் சார்ஜிங் நிலையங்களை அமைக்கலாம். உங்களிடம் குறைந்த மூலதனம் தான் இருக்கிறது எனும் போது முதலில் இரு சக்கர வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை மட்டுமே அமைக்கலாம். பின்னர் தொழில் மேம்படுவதை பொறுத்து அதனை விரிவுபடுத்திக் கொள்ளலாம். எனவே சார்ஜிங் நிலையத்தை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ததை அடுத்து இதற்கான முழுமையான ஒரு திட்டப் பணியினை தயாரிக்க வேண்டியது அவசியமாகிறது. தற்போது பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான franchiseகளை வழங்குகின்றன . அதையும் பயன்படுத்தி கூட சார்ஜிங் நிலையங்களை அமைத்துக் கொள்ளலாம்.

இந்த தொழிலை செய்ய விரும்புபவர்கள் அதற்கான முழு வழிகாட்டியையும் இந்த லிங்கில் (https://e-amrit.niti.gov.in/tips-for-businesses) இருந்து பெற்றுக் கொள்ளலாம். இதில் சார்ஜிங் நிலையம் அமைக்க என்னென்ன தேவை எப்படி அனுமதி வாங்குவது என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

Related Post

மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா? முதுகில் குத்திய பாகிஸ்தான் ராணுவம்.. கார்கில் சொல்லும் பாடம்

Posted by - May 12, 2025 0
ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இப்படி நடந்து கொள்வது முதல்முறை அல்ல. வாஜ்பாய் காலத்தில் லாகூர் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஒரு சில வாரங்களிலேயே கார்கில் போரை தன்னிச்சையாக…

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: மேலும் 3 பெண்கள் பலாத்காரம் செய்து கொலை- சாலைகளில் மக்கள் போராட்டம்

Posted by - July 22, 2023 0
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். அதுபோல நாகா மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம்…

லாட்ஜிக்கு நம்பி சென்றதால் விபரீதம்: காதலன், நண்பன் பலாத்காரம் செய்ததால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

Posted by - July 24, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பால் மேரு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து…

சீரமைப்பு பணிகள் நிறைவு – 51 மணி நேரத்திற்கு பிறகு ரெயில் சேவை தொடக்கம்

Posted by - June 5, 2023 0
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 17 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த…

கொரோனா பரவலுக்கு பிறகு மாரடைப்பு பாதிப்பு அதிகரிப்பு- மருத்துவமனைகளில் தீவிர ஆராய்ச்சி

Posted by - July 22, 2023 0
புதுடெல்லி: கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *