ஐபிஎல் 2024.. கஸ்டமர்கள் குதூகலம்.. 3 மாதங்களுக்கு டேட்டா.. மாதம் ரூ.222 மட்டும்.. Jio கிரிக்கெட் திட்டம்!

230 0

ஐபிஎல் 2024 (IPL 2024) போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கும் வேளையில் ஜியோ நிறுவனம், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தட்டித்தூக்கும் திட்டங்களை கொடுக்கிறது. ஜியோசினிமாவில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட இருப்பதால், இந்த திட்டங்கள் கவனம் பெற்றுள்ளன.ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டியானது, சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஆகவே, முதல் போட்டியில் இருந்தே ஆன்லைனில் காணும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோசினிமாவில் (JioCinema) நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால், ஜியோ கஸ்டமர்களுக்கு கூடுதல் டேட்டா தேவைப்படலாம். இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிக்களுக்காகவே ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.667 மற்றும் ரூ.444 விலையில் கிரிக்கெட் திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டங்களின் சலுகைகளை இப்போது, விரிவாக பார்ப்போம்.

ஜியோ ரூ 667 திட்ட விவரங்கள் (Jio Rs 667 Plan Details): இதுவொரு கிரிக்கெட் பேக் (Cricket Pack) டேட்டா திட்டமாகும். முழுக்க முழுக்க டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கிறது. வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற மற்ற எந்தவொரு சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்காது. ஆகவே, ஜியோ கஸ்டமர்களிடம் ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும்.

இந்த டேட்டா திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், மொத்தமாக 150 ஜிபி டேட்டா வழங்கப்படும். இதுவொரு லம்ப்-சம் டேட்டா (Lump Sum Data) சலுகையாகும். ஆகவே, வேலிடிட்டி நாட்களில் எப்போது வேண்டுமானலும் லிமிட் இல்லாமல் பயன்படுத்தலாம். இது கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 1.6 ஜிபி டேட்டாவை கூடுதலாக கொடுக்கிறது.

ஐபிஎல் 2024.. ஜியோ கஸ்டமர்கள் குதூகலம்.. 3 மாதங்களுக்கு டேட்டா!

இதன் மூலம் ஒரு ஜிபியை ரூ.7.41 கட்டணத்தில் பெற்று கொள்ளலாம். இந்த 150 ஜிபி டேட்டா சலுகை முடிந்த பிறகு, 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 3 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதைவிட கம்மியான விலையில் கிரிக்கெட் திட்டம் வேண்டுமானால், ஜியோ ரூ.444 டேட்டா பேக் (Jio Rs 444 Data Pack) இருக்கிறது.

ஜியோ ரூ 444 திட்ட விவரங்கள் (Jio Rs 444 Plan Details): இந்த திட்டமும் முழுக்க முழுக்க டேட்டா சலுகையை மட்டுமே கொண்டிருக்கிறது. முந்தைய திட்டத்தை போலவே வாய்ஸ், எஸ்எம்எஸ் போன்ற மற்ற எந்த சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 60 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

இந்த டேட்டா திட்டத்துக்கும் பேஸ் ஆக்டிவிட்டி திட்டம் இருக்க வேண்டும். இந்த 60 நாட்களுக்கு 100 ஜிபி லம்ப்-சம் டேட்டா கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டத்தை போலவே வேலிடிட்டி நாட்களில் எப்போது வேண்டுமானலும் டேட்டாவை முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 100 ஜிபியை 60 நாட்களுக்கு கணக்கிட்டால், 1.6 ஜிபி நாளொன்றுக்கு கிடைக்கிறது.அதேபோல 7.41 விலைக்கு இந்த 1.6 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த 100 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஐபிஎல் போட்டிகளை டேட்டா குறைவின்றி பார்க்க வேண்டுமானால், இந்த 2 டேட்டா திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடையாது.

Related Post

அச்சு அசல் அஜித் போலவே இருக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்.. நீங்க அவரை பார்த்து இருக்கீங்களா! இதோ புகைப்படம்

Posted by - October 11, 2025 0
அஜித் தமிழ் சினிமாவில் டாப் 3 நட்சத்திரங்களில் ஒருவராக அஜித் இருக்கிறார். இந்த ஆண்டு குட் பேட் அக்லி எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ள அஜித்,…

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற மனம் இன்றி எலிமினேட் ஆன ஆர்.ஜே.ஆனந்தி – சாச்சனா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted by - December 9, 2024 0
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் வெளியேறிய ஆர்.ஜே.ஆனந்தி மற்றும் சாச்சனா இருவருமே பெரிய தொகையுடன் தான் வெளியேறி உள்ளனர் என கூறப்படுகிறது.…

முதல் நாளே வெளியேறிய சாச்சனா.. சூட்டோடு சூடாக வெளியேறும் அடுத்த போட்டியாளர்

Posted by - October 8, 2024 0
#Bigg Boss Tamil : விஜய் டிவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த முறை அதிகம் பரிச்சயமான போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.…

பார்வதி, கம்ருதீனுக்கு Red Card கொடுத்து வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி… ரசிகர்கள் கொண்டாடும் புரொமோ

Posted by - January 3, 2026 0
பிக்பாஸ் 9 விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 9. இந்த சீசனில் மக்களால் வெறுக்கப்படும் போட்டியாளர்களாக பார்வதி மற்றும் கம்ருதீன் உள்ளனர். TTF…

கடந்த வாரம் வாட்டர்மெலன்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல்

Posted by - November 22, 2025 0
பிக் பாஸ் பிக் பாஸ் 9 தமிழ் கிட்டத்தட்ட 50 நாட்களை நெருங்கிவிட்டது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கி, பின் 4 போட்டியாளர்கள் வைல்டு கார்டில் என்ட்ரி கொடுத்தனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *