கமலின் இழிவான அரசியல், விஜய் ஒரு பொடிசு.. கடுமையாக சாடிய இயக்குனர்

150 0

அரசியல் ஆசை பலருக்கு இருந்தாலும் பெரும்பாலும் நடிகர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி விஜயகாந்த், சீமான் தற்போது விஜய் என சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் களம் காண்கிறார்கள். பெரும்பாலும் நடிகர்கள் மார்க்கெட் இழந்த பின்பு தான் அரசியலுக்கு வருவார்கள்.

ஆனால் இப்போது சினிமாவில் மிகப் பெரிய உயரத்தில் இருக்கும் விஜய் முழுவதுமாக படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு அரசியலில் இறங்க இருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடப் போகிறார். அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

ஆனால் அரசியலில் விஜய் ஒரு பொடிசு என பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் பேட்டி கொடுத்திருக்கிறார். அதாவது விஜய் மிக சிறந்த வாழ்க்கையை விட்டுவிட்டு எதிர்காலம் முழுவதும் துன்பத்தை ஆழ்த்தும் படி செயல்களை செய்து வருகிறார்.

கமல் மற்றும் விஜய்யை விமர்சித்த பிரபலம்

அவரது பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை பார்த்தாலே கட்சியின் நிலை மற்றும் நிர்வாகியின் செயல் எப்படி இருக்கும் என்பது தெரிகிறது. இதற்கெல்லாம் காரணம் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இவர் மனதில் அரசியல் ஆசையை தூண்டி விட்டது தான் காரணம்.

எஸ்ஏசியின் பேராசையால் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார். அரசியலில் விஜய் ஒரு பொடிசு. சீமானாலே ஒன்னும் செய்ய முடியாத நிலையில் விஜய்யால் ஒன்னும் பண்ண முடியாது. அதேபோல் கமலும் ஒரு இழிவான அரசியலை நடத்தி வருவதாக சாடி இருக்கிறார்.

அதாவது கமலின் கட்சி எந்த தொகுதியிலும் 2000 வாக்குகளுக்கு அதிகமாக பெறவில்லை. கமலை போல விஜய்யும் ஒரு செல்லாக்காசாக தான் அரசியலில் இருப்பார். விஜய்யின் அரசியல் பிரவேசம் எந்த தாக்கத்தையும் மக்களிடையே ஏற்படுத்தாது என திட்டவட்டமாக வேலு பிரபாகரன் கூறியிருக்கிறார்.

Related Post

1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!

Posted by - December 26, 2024 0
சட்டமன்ற தேர்தல் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. அரசு வாக்குகளை அள்ள புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டு நடக்க…

கோவையில் பிரபலமான பெண் பேருந்து ஓட்டுநருக்கு சிக்கல்… போலீசார் வழக்குப்பதிவு

Posted by - February 7, 2024 0
கோவையின் பெண் பேருந்து ஓட்டுனர் என பிரபலமான சர்மிளா மீது காட்டூர் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு…

சட்டென்று மாறிய வானிலை… கொட்டித் தீர்த்த கனமழை… இன்று எங்கெல்லாம் மழை தெரியுமா?

Posted by - May 31, 2023 0
சென்னை மற்றும் புறநகரில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்சாரம்…

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை தேவை – அன்புமணி வலியுறுத்தல்

Posted by - April 24, 2024 0
தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது…

‘இந்தி தெரியாது போடா’ என சொல்லிவிட்டு இப்ப ‘கேலோ இந்தியா’-வாம்… சூடு, சொரணை இல்லாத உதயநிதி – நடிகை விந்தியா விமர்சனம்

Posted by - January 29, 2024 0
திமுக இளைஞரணி மாநாடு பயனுள்ளதாக இல்லை என்றும், அது சர்க்கஸ் மாநாடு என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா கிண்டலடித்துள்ளார். பழனியில் முன்னாள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *