சட்டென்று மாறிய வானிலை… கொட்டித் தீர்த்த கனமழை… இன்று எங்கெல்லாம் மழை தெரியுமா?

314 0

சென்னை மற்றும் புறநகரில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

திருப்பூர் நகரில், பல்லடம் சாலை, ராயபுரம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. பலத்த காற்றால் மரம் முறிந்து, சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது விழுந்தது. கரட்டாங்காடு பகுதியில் செல்போன் டவர் முறிந்து விழுந்தது‌. பல இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதே போல, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், மைவாடி, ஜோதம்பட்டி, வேடப்பட்டி உள்ளிட்ட இடங்களில் சூறைக் காற்றுடன் பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. 200க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சரிந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டது. கோவை – சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டினம், குந்தாரப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தருமபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது. இதனால், முறையாக பராமரிக்கப்படாத அரசுப் பேருந்துக்குள் தண்ணீர் வழிந்து, பயணிகள் அமர முடியாத நிலை ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே வீசிய சூறைக் காற்றில் அரசு பேருந்து மேற்கூரை பெயர்ந்தது. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், அயப்பாக்கம், திருநின்றவூர், சோழவரம் ஆகிய பகுதிகளிலும் புழுதிக் காற்று சுழன்றடித்தது. சாலையில் சூழ்ந்த தூசு படலத்தால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. புறநகர் பகுதிகளில் திடீரென வீசிய காற்றால் ராட்சத கிரேன்கள் மூலம் நடைபெற்று வரும் அடுக்குமாடி கட்டட பணிகள் நிறுத்தப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கார்மேகங்களால், மாலை வேளையில் இருள் சூழ்ந்தது. மழை பெய்யாத போது, குளிர்ந்த காற்று வீசியதால் வெப்பம் தணிந்தது. இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே முன்னூர் கிராமத்தில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். வயலில் இருந்து வீட்டிற்கு மாட்டை அழைத்து வந்த போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.

Related Post

“நயன்தாராவின் அப்பாவாக நடிக்கும் சீமான்! படத்தின் கதை இதுதானா?!”

Posted by - January 4, 2024 0
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்’. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா…

பச்சை பட்டாணி.. வெண்டைக்காயைவிட பெஸ்ட்.. பச்சை பட்டாணியை சாப்பிடறீங்களா? அடேங்கப்பா.. இவ்ளோ இருக்கா?

Posted by - November 27, 2023 0
சென்னை: பச்சை பட்டாணியில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? பச்சை பட்டாணியை நிறைய சாப்பிடறீங்களா? அங்கே தான் பிரச்சனையே.. என்னன்னு பாருங்க. பொதுவாக, பச்சை காய்கறிகளும், பழங்களும்…

உக்கிரமா இருக்கும்.. தென் மாவட்டங்களில் மீண்டும் அதிகனமழைக்கு வாய்ப்பு! 3 நாட்கள் அலர்டா இருங்க

Posted by - December 26, 2023 0
சென்னை: தென் மாவட்டங்களில் மீது அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் எச்சரித்து உள்ளார். ராஸ்பி அலைவு கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிக்கு…

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்.. எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு.. கடந்த முறையை விட அதிகமா?

Posted by - April 20, 2024 0
கடந்த முறை 2019ஆம் தேர்தல் வாக்குப்பதிவுடன் தற்போதைய தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் ஒப்பீடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 2019-ல் தமிழ்நாட்டில் எத்தனை…

Tamil Nadu Budget 2024 Live : 12.00 மணி வரை தமிழக நிதிஅமைச்சர் அறிவித்த திட்டங்கள்….

Posted by - February 19, 2024 0
3000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்…! 3000 பேருந்துகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்து இந்த நிதியாண்டில் செயல்படுத்தப்படும் எனநிதியமைச்சர் தங்கம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *