Generated Image January 12 2026 10 59AM

கரூர் நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லி சிபிஐ முன்பு விஜய் இன்று ஆஜராகிறார்

102 0

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று ஆஜராகிறார். இந்த விசாரணை 3 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகிறது. பல்வேறு தரப்பினரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக நிர்வாகிகளிடம் நவ.24. 25-ம் தேதிகளில் விசாரணை நடைபெற்றது. சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித்சரண் ஆகியோர் டிச.2, 3-ம் தேதிகளில் கரூர் வந்து விசாரணை குறித்து ஆய்வு செய்தனர். மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், ஐ.ஜி.ஜோஷி நிர்மல்குமார், எஸ்.பி. ஜோஷ் தங்கையாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ கடந்த ஜன.6-ம் தேதி சம்மன் அனுப்பியது.

Related Post

திருமண மண்டபங்களில் மதுபானம் பறிமாறலாம்.. தமிழ்நாடு அரசு அனுமதி..!

Posted by - April 24, 2023 0
தமிழ்நாட்டில் ஏற்கனவே கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற…

இரவில் மல்லிகை வாசனை, கொலுசு சத்தம்.. சிசிடிவியில் பதிவான ஆவி?… பீதியில் மக்கள்..!

Posted by - March 2, 2023 0
செருப்பு அணிந்து நடக்கும் சத்தமும், யாரோ அழுவது போன்ற சத்தமும் நள்ளிரவில் கேட்பதாக தகவல் பரவியது. திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. திருவள்ளூர் ரயில்…

இடைநிலை ஆசிரியர்கள் கைது – கண்டனம் தெரிவித்த தினகரன்

Posted by - February 22, 2024 0
சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ள காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள்…

மின் கட்டணம் குறைய போகுது.. வீட்டுக்கே கணக்கெடுக்க வரும் அதிகாரிகள்.. சந்தோஷமான செய்தி

Posted by - November 9, 2023 0
சென்னை: அடுக்குமாடி பொது சேவை மின் கட்டணத்தை குறைப்பு விவகாரத்தில் வீட்டுக்கே வந்து அதிகாரிகள் சோதனை செய்ய தொடங்கி உள்ளனர். எந்த வீடுகள் எல்லாம் பத்து வீடுகள்…

நவீன கால நாட்டாமைகள்…! நடவடிக்கை எடுக்குமா அரசு…?

Posted by - April 13, 2023 0
“இந்த குடும்பத்தோட யாரும் அன்னந்தண்ணி பொழங்ககூடாது” என நாட்டாமை படத்தில்  நடிகர் விஜயகுமார் பேசும் சினிமா நாம் அனைவரும் அறிந்ததே.இந்த காலத்திலும் இப்படி ஊரை விட்டு ஒதுக்கி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *