பத்திரப்பதிவு அலுவலகங்களில் காலிமனை இடங்களை பதிவு செய்வதில் புதிய நடைமுறை

421 0

சென்னை:

பத்திரப்பதிவு துறை தலைவர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- காலி மனை இடங்கள் குறித்த ஆவணங்கள் சார் பதிவாளர்கள் அலுவலகங்களுக்கு பதிவிற்கு வரும்போது அந்த இடங்களில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும் கட்டிடம் குறித்த தகவல்களை ஆவணங்களில் குறிப்பிடாமல் அதனை காலி மனையிடமாகவே பதியும் நிலை தொடர்பாக புகார்கள் வருகின்றன.கே.சாத்தனூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதில் கால தாமதம்  | TRICHY NEWS: DELAY IN REGISTRATION OF DEED

இது அரசுக்கு வரும் வருவாயை பாதிப்பதாக உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் புதிய அறிவுரை சார்பதிவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. காலிமனை என குறிப்பிட்டு பதிவுக்கு வரும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரஸ் தாப இடத்தினை பதிவுக்கு முன்பாக புகைப்படம் எடுக்க வேண்டும். மேலும் இப்புகைப்படம் ஜியோ கோ-ஆர்டினேட்ஸ் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

இவ்வாறு எடுக்கப்படும் புகைப்படம் ஆவணத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறை வருகிற 16-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. காலிமனை என பதியபப்படும் ஆவணங்கள் தொடர்பாக இந்த அறிவுரையைப் பின்பற்றாத சார்பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Post

20 லட்சம் மதிப்புள்ள 557 கிலோ நாட்டு வெடிகள் 204 மூலப்பொருள் மூட்டைகளை பறிமுதல்

Posted by - October 31, 2023 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோயில் காவல் சரகத்திற்கு உட்பட்ட நாகரசம்பேட்டை கிராமத்தில் ரமேஷ்குமார் என்பவர் வீட்டில் வெடி பொருட்கள் மற்றும் வெடி தயாரிப்பதற்கான மருந்து பொருட்கள்…

கழிப்பறை இருக்கையில் இருந்து ‘இந்த’ ஆபத்தான நோய்களால் நீங்க பாதிக்கப்படலாம்… அப்ப என்ன செய்யணும் தெரியுமா?

Posted by - December 28, 2023 0
கழிப்பறை இருக்கைகள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், நீங்கள் ஆபத்தான தொற்றுநோய்களை பெற வாய்ப்புள்ளது. கழிப்பறை இருக்கையிலிருந்து நீங்கள் பெறக்கூடிய சில நோய்த்தொற்றுகள் பற்றி…

லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?

Posted by - July 18, 2025 0
அஜித்குமார் மரண வழக்கின் தாக்கம் குறைவதற்கு முன்பே, மயிலாடுதுறை டிஎஸ்பி உயர் அதிகாரிகள் மீது அளித்த குற்றச்சாட்டு திமுகவிற்கு பெரும் பின்னடைவை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறையால் ஆளுங்கட்சியான…

ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Posted by - December 9, 2025 0
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சரண் விடுப்பு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், எப்போது சரண் விடுப்பு பணம் பலன் பெறலாம், யாருக்கெல்லாம் தகுதி உள்ளது என்பது தொடர்பாக அரசாணை…

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே வெள்ளத்திற்கு காரணம்: சீமான் காட்டம்…

Posted by - December 6, 2023 0
சென்னை: திமுக அரசின் தோல்வியே சென்னை வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து சீமான் கூறியிருப்பதாவது: இயற்கைச் சீற்றத்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *