கொலை… கொள்ளை… வழிப்பறி – என்னாச்சு சட்டம்-ஒழுங்கு?

247 0

திருப்பூர், பல்லடத்துக்கு அருகேயுள்ள கள்ளக்கிணறு பகுதியில் நான்கு குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட அன்றைய தினம் மட்டுமே தமிழகத்தில் ஒன்பது கொலைகள் நடந்திருக்கின்றன. பட்டப்பகலில் கொலைசெய்கிறார்கள், வீட்டின் கதவை உடைத்து கத்திமுனையில் கொள்ளையடிக் கிறார்கள்

சமீபகாலமாக, குற்றச் செயல்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தாறுமாறாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், தமிழகம் தழுவிய அளவில் 15 பேர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி, ஒரே நாள் இரவில் சென்னையில் இரண்டு பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். ஈரோடு அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வயதான தம்பதி கொல்லப்பட்டதில் தொடங்கி, திருமழிசையில் ரெளடி எபினேசர் கொல்லப்பட்டது வரை, எங்கு பார்த்தாலும் ரத்தக்கறையாகக் காட்சியளிக்கிறது தமிழகம். ரெளடிகளுக்குள் நடக்கும் ‘கேங் வாரில்’ நாட்டு வெடிகுண்டுகள் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தும் கலாசாரம் அதிகரித்திருக்கிறது. வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களில் எந்தவித அச்சமும் இல்லாமல் ஈடுபட்டுவருகிறார்கள் குற்றவாளிகள்.

சிவகங்கை மாவட்டம், வீரவலசை கிராமம் அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த மர்ம நபர்கள், அரிவாளைக் காட்டி மிரட்டி நடத்துனரிடம் இருந்த பணப்பையைப் பறித்துச் சென்றிருக்கிறார்கள். பணியின்போது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி, சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள் போக்குவரத்துத்துறை ஊழியர்கள். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக் காவல்துறை மார்தட்டிக்கொள்கிறது. ஆனால், நடக்கும் சம்பவங்கள் எல்லாமே, ‘குற்றம் செய்பவர்களுக்குக் காவல்துறைமீது துளியும் அச்சம் இல்லை’ என்பதையே உணர்த்துகின்றன. “என்னாச்சு சட்டம்-ஒழுங்கு… என்ன செய்கிறது காவல்துறை?” என்று கேட்கிறார்கள் மக்கள்.

Related Post

ஏது பாஜகவிற்கு ஆட்சியில் பங்கா? அதெல்லாம் கிடையாது – எடப்பாடி பழனிசாமி தடாலடி விளக்கம்

Posted by - April 16, 2025 0
பாஜகவிற்கு ஆட்சியில் எல்லாம் பங்கு கிடையாது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா…

“புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக புகார் அளித்தவர் காட்டிக் கொடுக்கப்பட்டார்” – எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - January 20, 2025 0
கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில்…

10 அமைச்சர்களின் துறை மாற்றம்.. எந்த அமைச்சர் என்ன துறை?

Posted by - December 14, 2022 0
Tamilnadu Ministers department | 10 அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் 10 அமைச்சர்களின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு…
crime news

கோவை சிறுமி வழக்கில் ஷாக் : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

Posted by - May 23, 2026 0
சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கியக் குற்றவாளியான கார்த்தி என்பவருக்குக் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவையில் சடலமாக மீட்கபட்ட 10…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *