பல படங்களில் இதுபோன்ற கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் தன் யதார்த்த நடிப்பின் மூலம் ரசிக்க வைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்
கபடி என்றால் என்னவென்றே தெரியாத நாயகன் தன் குடும்பத்திற்காகவும் தாத்தாவிற்காகவும் கபடி கற்றுக்கொண்டு, வில்லன்களை எப்படி வீழ்த்துகிறார் என்பதே பட்டத்து அரசனின் கதை.
அதர்வாவின் மிடுக்கான தோற்றமும், கட்டுமஸ்தான உடல்வாக்கும் கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்துக்கு பக்காவாக பொருந்தியிருக்கிறது. எமோஷனல் காட்சிகளில் உருக்கமும்,சண்டை காட்சிகளில் மிரட்டலும், காதல் காட்சிகளில் எதார்த்தமும் என கமர்சியல் ஹீரோவிற்கான வடிவமைப்பில் கலக்கியிருகிறார் அதர்வா.
கம்பீரமான குடும்ப தலைவனாக நெகிழவும்,கபடி வீரானாக மிரளவும் வைக்கிறது ராஜ்கிரனின் நடிப்பு. பல படங்களில் இதுபோன்ற கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் தன் யதார்த்த நடிப்பின் மூலம் ரசிக்க வைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் ராதிகாவிற்கு மற்றுமொரு நல்ல ரோல், அதை தன் சிறப்பான நடிப்பின் மூலம் திரையில் அசத்தியிருக்கிறார்.
சிங்கம்புலியின் காமெடிகள் ஓரளவிற்கு ரசிக்கவைக்கிறது. நாயகி ஆஷிக்காவிற்கு கிராமத்து கதாபாத்திரம் ஓரளவிற்கு பொருந்தியிருக்கிறது, அதில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆர்.கே.சுரேஷின் வில்லத்தனமான நடிப்பு கதைக்கு கூடுதல் பலம். ஜிப்ரானின் பின்னணி இசை திரைக்கதையை மற்றொரு தளத்திற்கு எடுத்து செல்கிறது. பாடல்கள் அனைத்தும் அழகான கிராமத்து மண்வாசனை.
கிராமத்தின் இயற்கை அழகை பெரியதிரையில் கண்டுகளிக்க வைக்கிறது லோகநாதனின் ஒளிப்பதிவு. இயக்குனர் சற்குணத்தின் டிரேட் மார்க் ஜார்னரான கிராமத்து கமர்ஷியலிலேயே சற்று கபடி,சண்டை,காமெடி நிறைய எமோஷனல் என குடும்ப ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இயக்குனர். கதையில் பெரிய அளவில் சுவாரசியங்கள் இல்லை என்றாலும் ஆங்காங்கே வரும் காமெடி,பாடல்கள்,சண்டைகள்,கபடி காட்சிகள் என சலிக்காத வகையில் படம் முடிகிறது.
குடும்ப ரசிகர்களுக்கும், கிராமத்து வாசிகளுக்கும் இப்படம் பிடிக்கும் என்றாலும் இன்றைய தலைமுறை ரசிகர்களை கவருமா என்பது கேள்விக்குறியே?
Related Post
ஆண்ட்டியை நம்பியதால் கரியரை இழந்த நடிகர் கரண்; பிரபலம் கூறிய தகவல்!
ஹீரோவாக வலம் வர வேண்டும் என்று ஆசைப்பட்டு மார்க்கெட்டையும் இழந்தவர் தான் நடிகர் கரண். இவரை பற்றி பிரபல பத்திரிகையாளர் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.…
படுக்கையறை காட்சி குறித்து ஆழமாக பேசிய பிக் பாஸ் பூர்ணிமா..!!
பிக் சீசன் 7 நிகழ்ச்சியில் 16 லட்சம் கொண்ட பணப்பெட்டியை நைசாக தூக்கிச்சென்ற பிக் பாஸ் புகழ் பூர்ணிமா தற்போது சினிமாவில் படுக்கையறை காட்சி குறித்து ஆழமாக…
திடீரென விலகிய விடாமுயற்சி.. அதிர்ச்சியில் ரசிகர் வெளியிட்ட கடிதம்
விடாமுயற்சி வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீஸ் ஆகவில்லை என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.புத்தாண்டு அன்று விடாமுயற்சி ட்ரைலரை…
விரைவில் பையா 2 படத்தை தொடங்கப்போகும் இயக்குனர் லிங்குசாமி- கார்த்திக்கு பதில் இவரா?
பையா படம் லிங்குசாமி இயக்கத்தில் 2010ம் ஆண்டு கார்த்தி-தமன்னா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் பையா. தன்னை கவர்ந்த பெண் ஒரு இக்கட்டில் சிக்க, அவரை காப்பாற்றுவதற்காக…
18 நாட்களில் விக்ரம் படத்தின் மொத்த வசூல் சாதனையையும் அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்..
ஜெயிலர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம்…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (469)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (282)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

- சிறையில் இருந்து பரோலில் வந்து தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சவுக்கு சங்கர்

- TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்… கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி ‘ப்ராமிஸ்’!

- கும்பகோணம் த.வெ.க வேட்பாளர் புது முயற்சி….

- இன்று தமிழ் புத்தாண்டு! உற்சாகமாக கொண்டாடும் தமிழர்கள்!
