குழந்தையை பலாத்காரம் செய்து எரித்த வழக்கில் திருப்பம்! தஷ்வந்த் விடுதலை- உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

148 0

தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து ,உச்ச நீதிமன்றம், அவரை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற வழக்கில், தஷ்வந்த் மரண தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

சென்னை, போரூர் அருகே 2017ஆம் ஆண்டு அண்டை வீட்டு 6 வயதுக் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அவரை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றத்தை உறுதி செய்ய முடியாத காரணத்தால், தஷ்வந்த்தின் தண்டனையை ரத்து செய்ததாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டையே உலுக்கியே சம்பவம்

சென்னை போரூர், அடுத்த மாங்காடு அருகே கடந்த 2017 ஆம் ஆண்டு, 6 வயது பாலியல் வன்கொடுமை செய்து உடலை எரித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்த் பெயரை அவ்வளவு எளிதில் தமிழ்நாடு மறந்திருக்காது. தஷ்வந்த் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அந்தக் குழந்தையை கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கி இருந்தது.

இந்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு செங்கல்பட்டு நீதிமன்றம், தஷ்வந்த்துக்கு, 46 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் மற்றும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் மனு தாக்கல் செய்திருந்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், தூக்கு தண்டனையை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில்தான் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளது. சிசிடிவி காட்சிகள் மற்றும் டிஎன்ஏ மாதிரிகள் போதிய அளவில் தஷ்வந்துக்கு எதிராக இல்லை என்பதாலும் முறையான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாயைக் கொலை செய்த வழக்கிலும் விடுதலை

இதற்கிடயே தஷ்வந்த், தனது தாயை கொலை செய்த வழக்கில், அவரது தந்தை முக்கிய சாட்சியாக இருந்து வந்தார். இந்த வழக்கு செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தந்தையின் சாட்சி பிறழ் சாட்சியாக மாறியதால், கொலை வழக்கில் போதிய சாட்சி இல்லை எனக் கூறி தஷ்வந்த் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Post

2023 சென்னை வெள்ளத்தை விடுங்க! 2015ல் செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன? இரவில் பறந்த அந்த ஆர்டர்

Posted by - December 13, 2023 0
சென்னை: கடந்த 2015 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன என்பது குறித்து சென்னை வெதர் ட்விட்டர் பக்கத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மிக்ஜாம் புயலால்…

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவா இது? இந்த உடையில் அடையாளமே தெரியலையே

Posted by - January 7, 2023 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் மகள் ரோலில் நடித்து வருபவர் நேஹா. அவர் நடித்துவரும் இனியா ரோல் அந்த தொடரின் கதையில் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக…

அக்கு அக்கா உடையுதா முடி.. இதை மட்டும் ட்ரை பண்ணுங்க.. கருகருன்னு தலைமுடி வளர்ச்சிக்கு மாஸ் டிப்ஸ்

Posted by - December 15, 2023 0
சென்னை: இன்றைய நவீன சூழலில், தலைமுடி கொட்டுவதும், பலவீமான தலைமுடியும், மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இதற்கென்று எளிய தீர்வுகள் நம்மிடமே உள்ளன. இதனால், ஓரளவு தலைமுடி கொட்டுவதை…

14,121 உற்பத்தியாளர்கள் மூலம் தினமும் 1,38,000 லிட்டர் பால் கொள்முதல் – கலெக்டர் தகவல்

Posted by - November 15, 2023 0
திருப்பூர்: தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கால்நடை, பால்வளம்,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி பிரிவில்…

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார்: தொண்டர்கள், ரசிகர்கள் கண்ணீர்

Posted by - December 28, 2023 0
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *