விஜய்க்கு போன் போட்ட இபிஎஸ்! 30 நிமிடம் கூட்டணி பேச்சுவார்த்தை! DEAL-ஐ முடித்த பவன் கல்யாண்!

259 0

விஜய்-க்கு போன் போட்ட இபிஎஸ்! வாங்க தம்பி பாத்துக்கலாம் என்ற எடப்பாடி, பொங்கலுக்கு பிறகு வரேன் அண்ணா என்ற விஜய்! அதிமுக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தை பின்னணியில் பவன் கல்யாண் என்ற தகவல் வெளியான பரபரப்பை கிளப்பி உள்ளது

இபிஎஸ், விஜய்க்கு ஃபோன் போட்டு சுமார் 30 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்கின்றனர். இதற்கு பின்னணியில் பவன் கல்யாணின் பக்கா ப்ளான் இருந்ததாகவும், பேச்சுவார்த்தையின் முடிவில் கூட்டணி பற்றி முக்கியமான முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அரசியல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டார் தவெக தலைவர் விஜய். இதுதொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் மேலும் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

சிக்கலில் தவெக

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமும் தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது. மேலும் அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவுவிட்டுள்ளது. இப்படி தவெகவிற்கு அரசியல் ரீதியாகவும் சரி, நீதிமன்றம் ரீதியாகவும் சரி அடுத்த அடுத்த பேரிடியாகவே விழுந்தது . இது தவெக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிமுக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தை

இந்தநிலையில் தான் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் விஜய்-க்கு ஆதரவாக ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வந்தனர். கரூரில் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் உங்களை நேரில் வந்து சந்திப்பேன் என்று வாக்குறுதியளித்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படி பரப்பரப்பான அரசியல் களத்துக்கு மத்தியில் கடந்த திங்கள்கிழமை அக்., 06-ம் தேதி விஜய்-க்கு போன் போட்டு கரூர் சம்பவம் தொடர்பாக ஆறுதல் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று the prints இணையதளம் கட்டுரை எழுதியுள்ளது. மேலும் இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக  அதிமுக, தவெக தலைவர்கள் பேசியதாக பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது அதிமுக-தவெக கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மேலும் இந்த தொலைபேசி உரையாடல் சுமார் 30 நிமிடம் நீடித்ததாகவும் அதிமுகவின் ஒரு தலைவர் கூறியதாக குறிப்பிட்டுள்ளது. அதேபோல இன்னொரு தலைவர் கூறுகையில், அதிமுக-தவெக கூட்டணி 2026 பொங்கலுக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும், எங்களுக்கு பொது எதிரி திமுகதான் ஆகவே நாங்கள் இருவரும் கூட்டணி வைப்பது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

தவெக தரப்பில் கேட்டதாக, விஜய்ஈபிஎஸ் பேசிய உண்மைதான் என்பதை உறுதி செய்துள்ளது மேலும் கூட்டணி தொடர்பாக கேட்கும் போது தற்போது அதுபற்றி கருத்து எதுவும் சொல்ல முடியாது , எதுவாக இருந்தாலும் விஜய்தான் அறிவிப்பார் என்று நழுவியதாக தகவல் வெளியாகி உள்ளதுஅதேபோல அதிமுக உடன் கூட்டணி கிடையாது என்றும் அழுத்தம் திருத்தமான பதில் அவர்களிடம் இருந்து வரவில்லைஇதனை வைத்து பார்க்கும் போது அதிமுக-தவெக கூட்டணி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சீனுக்கு வந்த பவன் கல்யாண்

விஜய்ஈபிஎஸ் பேச்சுவார்த்தை எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்குஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் தான் காரணம் என சொல்கின்றனர்திமுகவின் தொடர் அரசியல் அழுத்தங்களை எதிர் கொள்ள நீங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் பேசவேண்டும் என்று விஜய்-யிடம் பவன் கல்யான் ஐடியா கொடுத்ததாக பேச்சு அடிபடுகிறதுஇதற்கு விஜய் உடனே ஓக்கே சொன்னதும்இந்த தகவலை தனது சோர்ஸ் மூலம் அதிமுகவினர் காதுகளுக்கு கொண்டு சென்றுள்ளார் பவன் கல்யாண்இதனை அடுத்து இபிஎஸ் விஜய்க்கு போன் போட்டு கரூர் சம்பவம் தனது ஆறுதலை தெரிவித்ததாகவும்மேலும் நடப்பு அரசியல் பற்றி சுமார் 30 நிமிடம் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளதுமேலும் இந்த பேச்சுவார்த்தை இரண்டு தரப்பிலும் மன நிறைவாக இருந்ததாக பேச்சு அடிபடுகிறது.

Related Post

பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!

Posted by - July 23, 2025 0
அதிமுக கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வருவதற்காக பாஜக-வை கூட்டணியில் இருந்து வெளியேற்ற எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற…
Gemini Generated Image gywpqbgywpqbgywp e1773396970165

பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன?

Posted by - March 13, 2026 0
திமுக மாணவரணி செயலாளர் பதவியிலிருந்து ராஜிவ் காந்தியை நீக்கி, கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். DMK Rajiv Gandhi: திமுக மாணவரணி செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜிவ் காந்தி,…

விசிகவை ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக.. ”முட்டு கொடுப்பதை நிறுத்திட்டு கட்சியை காப்பத்துங்க பாஸ்”

Posted by - September 22, 2025 0
 திமுக மீதான விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தந்த விசிக எம்.எல்.ஏ., ஆளுர் ஷா நவாஸை தவெகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முழு நேரமும் திமுகவிற்கு முட்டுக் கொடுப்பதை…

தவெக-வில் பெரும் சிக்கல்.. பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பாரா விஜய்?

Posted by - October 13, 2025 0
தவெக-வில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வலுவானவர்களாகவும், நெருக்கடியை திறம்பட சமாளிப்பவர்களாக இல்லாததும் விஜய்க்கு பின்னடைவாக உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியலில்…
tvk vijay

CPM Slams TVK: “ஆரோக்கியமான அரசியலுக்கு இது அழகல்ல..” – தவெக-வில் இணைந்த 4 அதிமுக MLA-க்கள்; சிபிஎம் கண்டனம்!

Posted by - May 26, 2026 0
“அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெக-வில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது அல்ல” என்று சிபிஎம் த மாநில செயலாளர் பெ.சண்முகம் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக அரசியலில் தவெக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *