“கேவலமா இருக்கு” டங்ஸ்டன் விவகாரம்.. இபிஎஸ்!

233 0

டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக துரோகம் இழைத்து விட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி அளித்துள்ளார்.

மதுரையில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் திமுக, அதிமுகவுக்கு இடையே பெரும் வார்த்தை போர் வெடித்துள்ளது.

இதில், அதிமுக துரோகம் இழைத்து விட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி அளித்துள்ளார்.

“கீழ்தரமான அரசியல்”

எக்ஸ் தளத்தில் இதுகுறித்து குறிப்பிட்ட அவர், “UPA (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) அரசில் திமுக அங்கம் வகித்த போது, கனிம வளங்களை ஏலம் விடாமல், தனியாருக்கு தாரை வார்த்து கொள்ளை அடிக்கப்பட்டது மற்றும் UPA அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது கனிமச் சுரங்கங்களை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமம் வழங்கினார்கள்.

NDA (தேசிய ஜனநாயக அரசு) ஆட்சியில் கனிம வள உரிமங்கள் ஏலமுறையில் விடப்படும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வந்து, கனிம வள ஊழலை தடுக்க ஏலமுறையை ஆதரித்துதான் தம்பிதுரை பேசி உள்ளார். தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப்பற்றி தம்பிதுரை நாடாளுமன்றத்தில் எவ்வித கருத்தையும் பேசவில்லை.

இந்த கனிம வள திருத்தச் சட்டம் 2023 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது, திமுக எம்பி-க்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. உண்மையை மறைத்து, என்னைப்பற்றி இப்படி தவறான தகவலை ஸ்டாலின் ‘X’ வலைதளத்தில் வெளியிட்டு கீழ்தரமான அரசியல் ஆதாயம் தேடுவது வெட்கக்கேடானது. கேவலமானது” என பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சரின் குற்றச்சாட்டு என்ன?

முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதில், “சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும்  பழனிசாமி, அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அதிமுகவின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.

சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன். தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது” என பதிவிட்டுள்ளார்.

Related Post

சிவாஜி ராவ் டூ சூப்பர் ஸ்டார்.. தமிழகம் கொண்டாடும் ரஜினிகாந்த்.. பிறந்தநாள் ஸ்பெஷல்!

Posted by - December 12, 2022 0
Rajinikanth Birth Day: ரஜினிகாந்த் கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழையும் அந்த முதல் காட்சி தமிழ் திரையுலக ரசிகர்கள் மனதின் திறவுகோலாகவும் அமைந்தது. 73 வது வயதில்…
court

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

Posted by - December 5, 2023 0
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்காக அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதன்பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு கூடி…

முதலுதவி.. பாம்பு கடித்தவுடன் இதை மட்டும் செய்திடாதீங்க.. முக்கோண தலையை தெரியுமா.. கவனம் மக்களே

Posted by - October 30, 2023 0
ஈரோடு: பாம்புகள் கடித்தால் என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதை அற்புதமாக விளக்கியுள்ளார் வனச்சரகர் சதீஷ் நிர்மல். இதுகுறித்து சத்தியமங்கலம் வனச்சரகர்…

BBTamil 8 Eviction: விஜய் சேதுபதியை காப்பாற்ற பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்? டபுள் எவிக்ஷனில் நடந்த ட்விஸ்ட்!

Posted by - December 9, 2024 0
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் தமிழ் சீசன் 8: விஜய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *