கடந்த ஆண்டை விட தீபாவளி தினத்தில் குறைந்த தீ விபத்து… கைகொடுத்த விழிப்புணர்வு.. தீயணைப்பு துறை!

355 0

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு தீ விபத்துகள் குறைவாக இருந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு தீ விபத்துகள் குறைவாக இருந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பட்டாசுகளை வெடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கவனக் குறைவாக பட்டாசுகளை வெடிக்கும்போது தீ விபத்துகளும், தீக்காயங்களும் ஏற்படுவது வழக்கம். இந்த விபத்துகளை தவிர்ப்பது எப்படி? என தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் ஏற்கெனவே ஆலோசனை வழங்கி இருந்தனர்.

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில், தீயணைப்புத்துறை சார்பில் சென்னையில் 276 இடங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரத்து 46 இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு பட்டாசு தீ விபத்துகள் குறைவாகவே பதிவாகியுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 254 தீ விபத்துகள் ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு 150 விபத்துகள் மட்டுமே பதிவாகியுள்ளன. சென்னையில் கடந்த ஆண்டு 102 தீ விபத்துகள் ஏற்பட்ட நிலையில் இந்த ஆண்டு 48 தீ விபத்துகள் பதிவானதாக தீயணைப்புத்துறை கூறியுள்ளது.தீ விபத்தில் காயமடைந்த 544 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். இதனிடையே சென்னையில் நேர விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Post

வாயை மூடிக்கிட்டிரு… பெண்ணை அதட்டிய அமைச்சர் பொன்முடி

Posted by - March 16, 2023 0
தொடர்ந்து அமைச்சர் பொன்முடி  மக்களிடையே சர்ச்சைக்குரிய வகையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார் .   பேருந்தில் பெண்களுக்கு இலவச திட்டம் தமிழக அரசு கொண்டு வந்திருப்பதை,…

அதை வாங்கி ஓசி சோரு சாப்புட்ற!! காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை அவமானப்படுத்திய பிக்பாஸ் பிரபலம்.

Posted by - July 17, 2023 0
விக்ரமன் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் விக்ரமன். அவர் சின்னத்திரையில் பணியாற்றி இருந்தாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரு பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்…

வெள்ளிக்கிழமை எந்த சாமியைக் கும்பிடணும்? செல்வம், அமைதி, குடும்ப வளர்ச்சிக்கான முக்கிய வழிபாடுகள் 2025ல் வைரல்!

Posted by - December 12, 2025 0
2025ல் ஆன்மீக ஆர்வம் அதிகரிச்சதோட, “வெள்ளிக்கிழமை எதை கும்பிடணும்? எது செல்வத்துக்கு நல்லது?”ன்னு Google-ல search பண்ணுறவர்களின் எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு. அதனால Friday devotional updates இப்போ…

பழைய உணவு பொருட்களை பயன்படுத்துவதால் விஷமாக மாறும் “சவர்மா”

Posted by - September 20, 2023 0
அரபு நாடுகளில் இறைச்சி துண்டுகளை உலோக குச்சியில் சொருகி நெருப்பில் சுட்டு சாப்பிடுகிறார்கள். இதில் சில மாற்றங்களை செய்து நமது நாட்டில் ‘சவர்மா’ என்ற பெயரில் தயாரித்து…

வீட்டு வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய MLA மகன்? பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்!

Posted by - January 19, 2024 0
பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன், அவரது வீட்டில் வேலை செய்த பெண்ணை கொடுமைபடுத்தியதாக கூறி பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *