கொடிபசலைக்கீரை.. கொட்டி கொட்டி கொடுக்கும் நன்மைகள்.. பளபள சருமத்துக்கு கைகொடுக்கும் கொடிபசலை இலைகள்

252 0

சென்னை:

கொடிபசலை கீரைகளின் நன்மை என்ன தெரியுமா? சரும பாதுகாப்புக்கு எப்படியெல்லாம் இந்த கீரையின் சாற்றினை பயன்படுத்தலாம் தெரியுமா?

சிகப்பு, பச்சை என்று 2 வகையான கொடி பசலைகளுமே உடலுக்கு நன்மை தரக்கூடியவை.. இந்த கீரைகளை போலவே, இதன் தண்டுகளிலும் நிறைய சத்துக்கள் உள்ளன. இரண்டிலுமே நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாகும். இதைத்தவிர, வைட்டமின் A, B, சுண்ணாம்பு, இரும்பு போன்ற சத்துக்கள் உள்ளன.கொடிபசலைக்கீரை.. கொட்டி கொட்டி கொடுக்கும் நன்மைகள்.. பளபள சருமத்துக்கு  கைகொடுக்கும் கொடிபசலை இலைகள் | Do you know the Amazing Health Uses of  Kodipasalai and ...எனவே, ரத்தம் சுத்தமாவதுடன், ரத்த விருத்தி அதிகமாகி ஹீமோகுளோபின் பிரச்சனை தீரும். நார்ச்சத்து நிறைந்த தாவரம் என்பதால், மலச்சிக்கலும் தீரும்.. இதனால், குடல் ஆரோக்கியமும் காக்கப்படும்.

சரும பாதுகாப்பு: சரும பாதுகாப்பை தருவதில், கொடிபசலைக்கு பெரும்பங்கு உள்ளது.. கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும்போது, முகம் பொலிவு பெறும், சருமம் பளபளப்பாகும். வீக்கம், கட்டிகள் இருந்தாலும், இந்த கீரையின் சாறு பயன்படுத்தி வரலாம்.

பாலுணர்வை தூண்டக்கூடிய கீரை என்பதால், மருத்துவத்தில் பெரும்பாலும் சிகிச்சைக்கு பயன்படுத்துகிறார்கள்.. உடலிலுள்ள உஷ்ணத்தை தவிர்த்து, குளிர்ச்சி தரக்கூடிய கீரை..

சிறுநீர் பிரச்சனை: அதனால்தான், சிறுநீர் பிரச்சனை என்றால், இந்த கீரையை வேகவைத்து சூப் போல குடிக்க சொல்வார்கள்.. ஆனால், சளி, இருமல், காய்ச்சல் நேரத்தில் இந்த கீரையை தவிர்த்துவிடலாம். கர்ப்பிணிகளுக்கு இந்த கீரையை சமைத்து தந்தால், வயிற்றை சுற்றி இருக்கும் திரவம் சுத்தமாகும்…

கொடி பசலைக்கீரை சாறில், ஒரு ஸ்பூன் எடுத்து அதில், கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்கு தந்து வந்தால் நீர்க்கட்டு குணமாகும். அதேபோல, கொடி பசலைக்கரையுடன் மல்லிவிதை, சீரகம் சேர்த்து கஷாயம் போல குடித்து வந்தால் மலச்சிக்கல் தீர்ந்து விடும்.. கொடி பசலை கீரையுடன் விளக்கெண்ணெய், மஞ்சள் சேர்த்து வதக்கி கட்டினால், எவ்வளவு பெரிய கட்டிகள் என்றாலும் பழுத்து உடைந்துவிடும்..

பாதாம்பருப்பு: இந்த கொடி பசலைக்கீரையை உளுந்து ஊற வைத்த தண்ணீர் சேர்த்து அரைத்து குடித்து வந்தால், பெண்களுக்கு எற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும். கொடிபசலைக்கரை சாறுஎடுத்து, அதில் பாதாம் பருப்பை ஊறவைத்து உலர்த்தி பொடி செய்து, பசும்பாலில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் விந்தில் உயிரணுக்ககளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பல நன்மைகளை பெற்றுத்தரும் இந்த கொடிபசலையை, மருந்தாக உட்கொள்ளும்முன்பு, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற வேண்டும்.

Related Post

தமிழ்நாட்டில் 5 நாட்கள் தொடர் கனமழை : வானிலை மையம் அலெர்ட்

Posted by - November 29, 2023 0
டிசம்பர் 3ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் – வானிலை மையம்… தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்…

உரையை வாசிக்காமலேயே வெளியேறிய ஆளுநர் – சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

Posted by - January 6, 2025 0
ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களிடம், ”தேசிய கீதம் இசைக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு அவமரியாதை செய்யக்கூடாது. அமைதியாக இருங்கள்” என்று…

தண்ணிகூட கொடுக்காம கண்டபடி அடிச்சாங்க.. அஜித்குமார் மரணத்தில் நடந்தது என்ன? சகோதரர் கண்ணீர்…

Posted by - July 2, 2025 0
சிவகங்கை காவல்நிலைய லாக்கப்பில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் விசாரணையில் நடந்த கொடூரத்தை கண்ணீருடன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட…

”நேர்மையில்லாத ஆளுநர் ரவி” 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல், உச்சநீதிமன்றம் ஆப்பு – மாநில அரசின் வசமாகும் பல்கலை.,

Posted by - April 8, 2025 0
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் துணைவேந்தர்களை நியமிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் அதிகாரம் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாட்டில் நேர்மை இல்லை என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.…

நடிகர் ராஜேஷ் சாவுக்கு காரணம் இவர்தான்.. ராஜேஷின் தம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - May 29, 2025 0
சித்த மருத்துவர் 2 மணி நேரம் பேசிக்கொண்ட நேரத்தை இழுத்தடித்ததே நடிகர் ராஜேஷின் மரணத்திற்கு காரணம் என்று அவரது தம்பி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபலமான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *