கோவிலுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபரை கன்னத்தில் அறைந்த பக்தர்- பயங்கரவாத தடுப்பு ஒத்திகையில் பரபரப்பு

231 0

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் உள்ள சுவாமி நாராயண் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் முகத்தை துணியால் மூடி இருந்தார். அதை பார்த்ததும் கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர். துப்பாக்கியுடன் இருந்த நபர், வாலிபர் ஒருவரை பிணை கைதியாக பிடித்து வைத்திருந்தார். இதனால் கோவிலுக்குள் பயங்கரவாதி புகுந்து விட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது கோவிலில் இருந்த பக்தர் ஒருவர், துப்பாக்கியுடன் இருந்த நபரை நோக்கி சென்றார். அவர், முகமுடி அணிந்திருந்த நபரின் கன்னத்தில் பளார் என அறைந்தார்.

அப்போது, தான் பயங்கரவாதி அல்ல போலீஸ்காரர் என்றும், இது பயங்கரவாத தடுப்பு தொடர்பாக போலீசாரின் ஒத்திகை என்றும் துப்பாக்கியுடன் இருந்த நபர் தெரிவித்தார். பிணைக் கைதியாக இருந்த வரும் போலீஸ்காரர் ஆவார். பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்திகைக்காக போலீஸ்காரர் துப்பாக்கியுடன் பயங்கரவாதி போல் மாறு வேடத்தில் கோவிலுக்குள் நுழைந்தது தெரிய வந்தது. மேலும் போலீஸ்காரர் கன்னத்தில் அறைந்தவர் பிரசாந்த் குல்கர்னி என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பலர் அதிருப்தி தெரிவித்தனர். பொதுமக்கள், குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் இது போன்ற ஒத்திகைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

Related Post

ஆந்திராவில் பெண்களை இரவு நேரங்களில் வீட்டில் கொண்டு விட புதிய திட்டம்

Posted by - May 9, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் தனியாக பயணம் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண்கள் வீட்டில் விடும் புதிய திட்டத்தை போலீசார்…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்.. ஜனாதிபதி உரை

Posted by - January 31, 2023 0
திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறக முதல்முறையாக பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். பாராளுமன்றத்தில்…

ஆந்திராவில் கிராமங்களில் மீன் மழை- ஆச்சரியத்துடன் அள்ளிச் சென்றனர்

Posted by - July 21, 2023 0
திருப்பதி: ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வஜ்ரபு கொட்டூர்…

8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி: ‘ரீல்ஸ்’ வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

Posted by - July 29, 2023 0
கொல்கத்தா : மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்காநகர் பனிஹத்தி பகுதியில் அந்த தம்பதி வசித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த சில வாரங்களாக தங்கள்…

CIBIL Score: வங்கிக் கடன் வாங்க சிபில் ஸ்கோர் அவசியமில்லை, அதோடு.. – மத்திய அரசின் அதிரடி அறிவிப்புகள்

Posted by - August 25, 2025 0
CIBIL Score Bank Loan: வங்கிகளில் முதல் முறையாக கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. CIBIL Score Bank Loan: சிபில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *