vijay

ADMK: “வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்..” விஜய்யை விளாசிய அதிமுக!

107 0

பேருந்து சேவையைத் தொடங்கிய முதலமைச்சர் விஜய் பேருந்தில் சென்றபோது அதற்காக மக்களை காத்திருக்க வைத்ததற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 300 புதிய மின்சார பேருந்துகள் வாங்கப்பட்டு அதன் சேவைகள் தொடங்கப்படாமலே இருந்தது. இந்த சூழலில், அந்த புதிய பேருந்துகளின் சேவையை இன்று முதலமைச்சர் விஜய் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

பேருந்தில் சென்று விஜய் ஆய்வு:

அப்போது, தலைமைச் செயலகத்தில் இருந்து பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய் அதே பேருந்தில் கலங்கரை விளக்கம் வரை சென்று ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் கலங்கரை விளக்கம் வரை பேருந்தில் சென்று ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பான அந்த சாலையின் ஒரு பக்க போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 300 புதிய மின்சார பேருந்துகள் வாங்கப்பட்டு அதன் சேவைகள் தொடங்கப்படாமலே இருந்தது. இந்த சூழலில், அந்த புதிய பேருந்துகளின் சேவையை இன்று முதலமைச்சர் விஜய் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

பேருந்தில் சென்று விஜய் ஆய்வு:

அப்போது, தலைமைச் செயலகத்தில் இருந்து பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய் அதே பேருந்தில் கலங்கரை விளக்கம் வரை சென்று ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் கலங்கரை விளக்கம் வரை பேருந்தில் சென்று ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பான அந்த சாலையின் ஒரு பக்க போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால், அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. சில வாகன ஓட்டிகள் ஆவேசப்பட்டு அங்கிருந்த காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும், பேருந்தில் பயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்டு முதலமைச்சர் விஜய் பேருந்தில் இருந்து மக்களை தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார்.

வெயிட் பண்ணுங்க ரீல்ஸ் எடுக்கனும்:

பேருந்தில் பயணம் செய்த முதலமைச்சர் மக்களை வீடியோ எடுத்தும், கை காட்டி சென்றதையும் சாலையில் வெயிலில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டதையும் ஒப்பிட்டு அதிமுக கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அவர்களது ஐடி பிரிவின் எக்ஸ் பக்கத்தில்  முதல்வர் ரீல்ஸ் எடுக்கனும் வெயிட் பண்ணுங்க மக்களே என்ற விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவின் மேல், முதல்வர் ரீல்ஸ் எடுக்கணும்….
Wait பண்ணுங்க மக்களே…

என்ன மக்களே கேள்வி எல்லாம் கேக்குறீங்க?  6 மாசத்துக்கு எந்த கேள்வியும் கேக்க கூடாது ன்னு முதல்வர் சொல்லிருக்காரு தெரியும்ல? “அண்ணன் வர்றார் வழி விடு” ன்னு சொன்னது
அப்போ புரியல… இப்போ புரியுது!

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளனர்.

நீண்ட நாட்களாக இந்த பேருந்துகளின் சேவை தொடங்கப்படாமலே உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் மத்தியில் இந்த பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

Related Post

தமிழ்நாடு ஆளுநர், இலச்சினை.. திருவள்ளுவர் ஆண்டு.. ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழ்

Posted by - January 23, 2023 0
வரும் 26ஆம் தேதி நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் வரவேற்பு அழைப்பிதழ் பேசுபொருளாகியுள்ளது. சென்னையில் ஜனவரி 4ஆம் தேதி நடந்த நிகழ்வு ஒன்றில்,…

வலுவிழந்த மாண்டஸ் புயல்… கரையை கடக்கும் போது சீறுமா..?

Posted by - December 9, 2022 0
Cyclone Mandous | வங்கக் கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் தீவிர புயலிலிருந்து புயலாக வலுவிழந்து உள்ளது. மாண்டஸ் தீவிர புயல் இன்று காலை வலுவிழந்து தற்போது சென்னையில் தெற்கு கிழக்கு…

காதலை கண்டித்ததால் ஆத்திரம்- தம்பியை கொன்று 20 துண்டுகளாக வெட்டி ஏரியில் வீசிய அக்காள்

Posted by - March 21, 2023 0
ஓசூர்: கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம் சிந்திகி தாலுகாவுக்கு பட்ட தேவனாங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா பூசாரி. இந்த கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது.…

பாடசாலையா? பாலியல் குற்றவாளிகள் கூடாரமா? பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்! கொதிக்கும் ஈபிஎஸ்

Posted by - December 26, 2024 0
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? இந்த ஆட்சியின் அலட்சியத்தால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- ஈபிஎஸ். தமிழ்நாட்டின் பெருமைமிகு…

செல்போன் செயலியில் களம் இறங்கும் விஜய்.. 234 தொகுதிகளுக்கும் குறி… அரசியல் பிளான் என்ன?

Posted by - March 4, 2024 0
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இந்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *