ஆந்திராவில் கிராமங்களில் மீன் மழை- ஆச்சரியத்துடன் அள்ளிச் சென்றனர்

229 0

திருப்பதி:

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வஜ்ரபு கொட்டூர் மண்டலம், வஜ்ரபு கோனேரு, பூபால பள்ளி, காளேஸ்வரி நகர், சுல்தானாபாத் சாஸ்திரி நகர், மகாதேவ்பூர் உள்ளிட்ட இடங்களில் கன மழையுடன் வானத்தில் இருந்து மீன்கள் விழுந்தன. இதனால் சாலைகள் முழுவதும் மீன்கள் துள்ளி குதித்தபடி ஊர்ந்தன. 100 நாள் வேலைக்கு சென்ற பெண்கள் சாலையில் கொட்டிய மீன்களை ஆச்சரியத்துடன் பார்த்து தங்களது வீடுகளுக்கு அள்ளிச் சென்றனர்.

இதேபோல் வஜ்ரபு கோனேரு கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் அதிக அளவு மீன்கள் விழுந்தன. கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் தரையில் விழுந்த மீன்களை போட்டி போட்டு மீன்களை சேகரித்து எடுத்துச் சென்றனர். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் முதல் முறையாக வானத்திலிருந்து மழையுடன் மீன்கள் மீன்கள் விழுந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

வானத்திலிருந்து விழுந்த மீன்கள் கருப்பு நிறத்தில் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்ததாக தெரிவித்தனர். வானத்திலிருந்து மழையுடன் மீன்கள் கொட்டியதை அப்பகுதி மக்கள் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Post

இந்தியாவில் 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள், குழந்தைகள் மாயம்… `பகீர்’ கிளப்பும் NCRB ரிப்போர்ட்!

Posted by - August 1, 2023 0
இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள், கடத்தல் மற்றும் கொலைக் குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்திருப்பது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை…

ஏர்டெல் ரூல்ஸ்.. இனிமே ரூ.20 இல்லனா.. SIM கார்டு டீஆக்டிவ்.. 90 நாட்களுக்கு குறி.. கால்கள், எஸ்எம்எஸ், டேட்டா!

Posted by - February 8, 2025 0
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் அவர்களது சிம் கார்டு மூலம் 90 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை பயன்படுத்தவில்லை என்றால், உங்களது சிம் கார்டு டீஆக்டிவேட்…
Generated Image November 06 2025 10 33AM

ஒரே ரீசார்ஜ் ப்ளான்.. முற்றிலும் வித்தியாசமான பலன்கள் – ஏர்டெல்-ஜியோ-வோடாஃபோன் எது பெஸ்ட்?

Posted by - November 6, 2025 0
Airtel Vs Jio Vs Vi: ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாஃபோன் ஐடியா நிறுவனங்கள், ஒரே மாதிரியான ரீசார்ஜ் கட்டணத்தில் முற்றிலும் வித்தியாசமான பலன்களை வழங்குவது குறித்து…

Post Office அக்கவுண்ட்டில் பணம் கட்ட க்யூவில் நிற்க வேண்டியிருக்கா..? வீட்டில் இருந்தே எந்நேரமும் பணம் செலுத்த எளிய வழி இதோ!

Posted by - December 21, 2022 0
போஸ்ட் ஆஃபிஸ் அட்டகாசமான வழி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இனி நீங்கள் வீட்டிலிருந்தபடியே போஸ்ட் ஆஃபிஸில் பரிவர்த்தனை செய்யலாம். சேமிப்பு என்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. பணத்தை செலவு…

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் – 25 முறை மகளைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை

Posted by - June 1, 2023 0
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் சூரத்தில் வசித்து வருபவர் ராமானுஜ சாஹு. இவர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *