கோவைக்கு பதில் மயிலாடுதுறை? கமல்ஹாசனால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்த சிக்கல்

185 0

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சேரும் பட்சத்தில் கோவை தொகுதி ஒதுக்கப்படும் என தகவல்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோயம்புத்தூர் தொகுதிக்கு பதிலாக மயிலாடுதுறை தொகுதியை எடுத்துக் கொள்ள திமுக  வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என கருதப்படும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது. கடந்த முறை பின்பற்றியதை போல் இந்த முறையும் செயல்படுத்த திமுக முயற்சிக்கும் நிலையில், கடந்த முறை போல் அல்லாமல் இம்முறை கூடுதல் தொகுதிகளை பெற கூட்டணி கட்சிகள் முட்டி மோதுகின்றனர்.திமுக கூட்டணியில் இதுவரை கொங்கு மக்கள் தேசியக் கட்சிக்கு ‘நாமக்கல்’ தொகுதியும், இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் கட்சி ‘இராமநாதபுரம்’ தொகுதியும் ஒதுக்கப்பட்டது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சிகள் இடையே தனித்தனியான இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்த வரையில் கடந்த முறை போட்டியிட்ட மதுரை மற்றும் கோயம்புத்தூர் தொகுதிகளில் வெற்றிபெற்றது. இம்முறையும் அந்த 2 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.இம்முறை கூட்டணியில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணையும் என கூறப்படுகிறது. அவ்வாறு கமல்ஹாசன் இணையும் பட்சத்தில் அவரது கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும், அதில் ஒன்று கோயம்புத்தூர் தொகுதியாக இருக்கும் என தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இதனால் கடந்த முறை மார்க்சிஸ்ட் கட்சிக்கு இம்முறை கோயம்புத்தூர் தொகுதியை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுஇருப்பினும் மதுரை தொகுதியோடு மயிலாடுதுறை தொகுதியை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்க தயார் என திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் மார்க்சிஸ்ட் கட்சி மயிலாடுதுறை தொகுதியை ஏற்றுக்கொள்ளுமா? அல்லது வேறு தொகுதியை கேட்டு பேச்சுவார்த்தை நடத்துமா? என்பது விரைவில் தெரிய வரும்

Related Post

சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட உள்ள 2 முக்கிய தீர்மானங்கள்

Posted by - February 14, 2024 0
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை எதிர்த்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக…

பிரபல அரசியல் கட்சி நிர்வாகிகள், YouTuber-களின் அதிர்ச்சி வீடியோக்களை அடுத்தடுத்து லீக் செய்த மதன் ரவிச்சந்திரன்.. தமிழகமே பரபரப்பு..!

Posted by - March 16, 2023 0
பொறுப்புத்துறப்பு: இந்த செய்தி Mars Tamilnadu Youtube பக்கத்தில் வெளியான முதல் 4 விடியோக்களில் கூறியதை சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.   எங்கும் அரசியல், எதிலும் அரசியல்…

சினிமாவை விட்டு விலகும் முடிவில் விஜய்? அப்போ கடைசி படம் இதுதானா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Posted by - June 18, 2023 0
சினிமாவை விட்டு விலகும் முடிவில் விஜய்? அப்போ கடைசி படம் இதுதானா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய், சினிமாவை…

இறுதி மூச்சு வரை ஸ்டாலின் தான் முதல்வர்.. நாக்கை நீட்டி வாக்கு சொன்ன அமைச்சரால் சிரிப்பலை

Posted by - December 17, 2022 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் நிரந்தர முதலமைச்சர் என்றும், அவர் இறுதி மூச்சுவரை முதலமைச்சராக இருப்பார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். இறுதி மூச்சு உள்ள வரை…

புதுச்சேரியில் மது விற்பனையை அதிகரிக்க போட்டி போட்டு சலுகைகள் அறிவிப்பு- 2 பீர் வாங்கினால் ஒன்று இலவசம்

Posted by - July 5, 2023 0
புதுச்சேரி: புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் மது நுகர்வோர்களாக உள்ளனர். புதுவையின் அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அரசின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *