சாதனை விலைக்கு விற்கப்பட்ட இந்தியன் 2…

254 0

ஷங்கர் தெலுங்கில் இயக்கிவரும் கேம் சேஞ்சரின் முதல் பாடல், மார்ச் 27, ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதனையொட்டி, சமூகவலைதளத்தில் பதிவிட்ட படத்தின் தில் ராஜு, இன்னும் 5 மாதங்களில் கேம் சேஞ்சர் முழுமையாக உங்களுடையதாகும் என ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்.

ஷங்கர் ஒரே நேரத்தில் மூன்று படங்களை இயக்கி வருகிறார். இந்தியன் 2, இந்தியன் 3, கேம் சேஞ்சர். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்தியன் 3 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தியன் 2 வெளியீட்டுக்குப் பிறகு அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க உள்ளனர்.

ஷங்கர் தெலுங்கில் இயக்கிவரும் கேம் சேஞ்சரின் முதல் பாடல், மார்ச் 27, ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதனையொட்டி, சமூகவலைதளத்தில் பதிவிட்ட படத்தின் தில் ராஜு, இன்னும் 5 மாதங்களில் கேம் சேஞ்சர் முழுமையாக உங்களுடையதாகும் என ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார். இதனால், கேம் சேஞ்சர் வெளியாக இன்னும் 5 மாதங்களாகும் என்பது தெளிவாகிறது.

அதற்கு முன் இந்தியன் 2 படத்தை வெளியிட உள்ளனர். 1996 ல் இந்தியன் வெளியான போது, கர்நாடகாவில் மாபெரும் வெற்றியை பெற்றது. கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யாமலே அங்கு படம் பல வாரங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. இதனால், இந்தியன் 2 படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை வாங்க போட்டி நிலவியது. இந்தியன் 2 படத்தின் கர்நாடக திரையரங்கு விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. இவர்கள் கன்னடத்தின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாகும். இதுவரை வெளியான தமிழ்ப் படங்கள் அனைத்தையும்விட அதிக தொகைக்கு இந்த உரிமை வாங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கர்நாடக உரிமை அதிக தொகைக்கு விற்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற சாதனையை, வெளியாகும் முன்பே,  இந்தியன் 2 படைத்துள்ளது. மேலும், பல சாதனைகளை இப்படம் ஏற்படுத்தும் என உறுதியாக நம்பலாம்.

Related Post

காதலனுடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அமலா பால்.. வளைகாப்பு நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Posted by - December 8, 2023 0
அமலா பால் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். சமீபகாலாமாக இவர் வரிசையாக தொடர்ந்து படங்களில் நடிக்காமல், சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து…

ஊரே கழுவி ஊத்தும் அனிமல் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போகும் ரஜினி பட நடிகை.. யார் தெரியுமா

Posted by - December 13, 2023 0
அனிமல் சமீபத்தில் ஹிந்தியில் எடுக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிவந்த திரைப்படம் அனிமல். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா என…

விஜய் மகன் ஜேசன் சஞ்சய்-யின் முதல் படம்.. கைவிட்ட அனிருத்? கைதூக்கிவிடும் மியூசிக் டைரக்டர்

Posted by - November 23, 2024 0
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்துக்கு இசையமைப்பது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தன் தந்தை மாதிரி சினிமாவில் ஹீரோவாக…

“விஜய் சேதுபதியின் 50வது படத்தின் வேற லெவல் Title Poster இதோ..!”

Posted by - July 13, 2023 0
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு 50வது படம் என்பது முக்கியத்துவமாக பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் விஜய் சேதுபதியின் 50வது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி…

ஹனிமூனில் சினேகா போட்ட கண்டிஷன்.. விஜய் போல ரிஸ்க் எடுத்த பிரசன்னா

Posted by - April 18, 2023 0
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் ஸ்னேகா மற்றும் பிரசன்னா. காதலித்து வந்த அவர்கள் இருவரும் 2012ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தற்போது ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *