modivijay

தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம்; மத்திய அரசுடன் மோதலை விரும்​ப​வில்​லை: முதல்வர் விஜய் திட்டவட்டம்

30 0

சென்னை: ‘‘நமக்கு எப்​போதும் தமிழகத்​தின் வளர்ச்​சி​தான் முக்​கி​யம். எனவே, மத்​திய அரசுடன் கண்​மூடித்​தன​மான மோதலை விரும்​ப​வில்​லை’’ என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​தார்.

தமிழக சட்​டப்​பேரவைத் தொடரின் கடைசி நாளான நேற்​று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீது எதிர்க்​கட்​சிகளுக்குப் பதிலளித்து முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: நமது தமிழகம் மின்​மிகை மாநில​மாக இருந்​தா​லும், கடந்த காலங்​களில் ஏற்​பட்ட நிர்​வாக குளறு​படிகள், சிலரின் திட்​ட​மிட்ட நடவடிக்​கைகள் மின்​வெட்​டுக்​குக் காரண​மாக இருக்​கின்​றன.

விரை​வில் இந்த மின்​வெட்டு நிலைமை அறவே நீக்​கப்​படும். சட்​டம் – ஒழுங்கு சரி​யாக இருக்க வேண்​டும் என்​ப​தில் மாற்று கருத்து இல்​லை. அதே போல், பெண்​கள் பாதிக்​கப்​படு​வதை​யும் இங்கு யாராலும் சகித்​துக் கொள்ள முடி​யாது. அதற்​கான கடுமை​யான நடவடிக்​கையை அரசு எடுத்து வரு​கிறது. அதே​போல், போதைப்​பொருள் நடமாட்​டத்​தைக் கட்​டுப்​படுத்​த​வும் நம் அரசு கடுமை​யான நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. தொடர்ந்து நடவடிக்கை எடுப்​போம்.

இவை எல்​லாம் பல ஆண்​டு​களாக இருக்​கும் பிரச்​சினை​கள். கடந்த 10 மாதங்​களாக நமது மாநிலத்​தில் சட்​டம் – ஒழுங்கு டிஜிபி இல்​லை. கடந்த ஆட்​சி​யில் நடந்​ததற்கு எல்​லாம் நமது ஆட்​சி​யில்​தான் விடையே கண்​டு​பிடித்து இருக்​கிறோம். போதைப் பொருள் நடமாட்​டம் தாறு​மாறாக பரவி​யுள்​ளது. இவற்றை எல்​லாம் ஆரம்​பக் கட்​டத்​திலேயே யார் கட்​டுப்​படுத்தி இருக்க வேண்​டும். அப்​போது காவல் துறை யார் கட்​டுப்​பாட்​டில் இருந்​தது. காவல் துறையைக் கட்​டுப்​பாட்​டில் வைத்​துக் கொண்டு ஆரம்​பக் கட்​டத்​திலேயே போதைப் பொருள் நடமாட்​டத்தை ஏன் கட்​டுப்​படுத்​த​வில்​லை? நம்​முடன் சேர்த்து மக்​கள் மீதும் அவதூறு பரப்​பு​கிறார்​கள்.

மக்​கள் நமக்கு ஓட்​டுப் போட்​டதும், குடும்​பம் குடும்​ப​மாக மக்​கள் ஆதரவு தெரி​வித்​ததும் தவறு என்​கிறார்​கள். இது இப்​போது இல்​லை. எம்​ஜிஆர் காலத்​தில் இருந்தே இருக்​கிறது. எம்​ஜிஆர் வெற்றி பெற்ற போது, அப்​போதும் மக்​களைத் தவறாகப் பேசி​யிருக்​கிறார்​கள். கடந்த 50 ஆண்​டு​களாக ஒரே ‘டெக்​னிக்’. தொழில்​நுட்​பம் எல்​லாம் மாறி வேறு எங்​கேயோ சென்று கொண்​டிருக்​கிறது. கொஞ்​சம் டெக்​னிக்​கை​யா​வது மாற்ற வேண்​டும். மக்​களுக்கு பயனுள்ள ஆக்​கப்​பூர்​வ​மான கருத்​துகள் இருந்​தால் சொல்​லலாம்.

5 நிமிடம் பேசி​யதற்கே கொளத்​தூர் இந்த ஆட்​டம் ஆடியது. பேசு பேசு என்​றால் அப்​புறம் நான் என்ன செய்​வது? ஆளுநர் உரையன்​று, தேசிய கீதம் 2 முறை பாடினது தவறு. அப்​படி ஒரு நிகழ்வு நடந்​ததே இல்​லை. மரபையே மாற்றி விட்​டீர்​கள் என்று எதிர்க்​கட்​சி​யைச் சேர்ந்​தவர்​கள் கூறினர். கடந்த 2021 ஆகஸ்ட் 2-ல் முன்​னாள் முதல்​வர் கருணாநிதி படத்​தைத் திறந்து வைக்​கும் நிகழ்ச்சி நடந்​தது. அப்​போது, தேசிய கீதத்​தைத் தொடர்ந்து தமிழ்த்​தாய் வாழ்த்து என்று சொன்​னார்​கள்.

Related Post

’அண்ணாமலை பெஸ்ட் – கூட்டணியை விட்டு வெளியேற காரணம் இதுதான்’ டிடிவி தினகரன் அதிரடி..!

Posted by - September 6, 2025 0
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஏன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது என்பதை டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் அறிவார்கள் என்றும், எங்களுக்கு என்ன இடர்பாடு…
we

இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்

Posted by - March 14, 2026 0
திமுக அரசின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவடையும் சூழ்நிலையில், விடுமுறை நாளான இன்று முக்கிய அரசுத் துறை அதிகாரிகளை பணியாற்ற மேலதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். திமுக அரசின்…
exit poll

Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்?

Posted by - April 28, 2026 0
Exit Poll Results 2026: தமிழ்நாடு,கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் திருவிழா நாளையுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு…

பாஜக-வை கழட்டிவிடுங்க… விஜய்யை உள்ளே கொண்டு வாங்க.. என்ன செய்வார் எடப்பாடி?

Posted by - July 14, 2025 0
அதிமுக கூட்டணியைப் பலப்படுத்த பாஜக-வுடனான உறவை துண்டித்துவிட்டு, விஜய்யின் தவெக-வை உள்ளே கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வலுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு…

அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! – கதறும் பாஜக

Posted by - December 13, 2025 0
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற அதிமுக – பாஜக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைக்க காய் நகர்த்தப்பட்டு வருகிறது. அதே நேரம் ஓபிஎஸ் மற்றும் டிடிவியை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *