சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா ? விசாரணை நடத்த இ.பி.எஸ் வலியுறுத்தல்..!!

227 0

சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா இல்லையா என்பதை நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இ.பி.எஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

சமூக ஊடக பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ஒரு சில சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டி கைதுசெய்துள்ளது காவல்துறை. அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை சந்தித்தப்பின் அளித்த பேட்டியில்,
சவுக்கு சங்கர் சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நல்ல நிலையில் சிறைக்கு சென்றார்.

இந்நிலையில் கோவை சிறையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் எனவே மாண்புமிகு நீதிபதி ஒருவரை நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டி மனு அளித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் விடியா திமுக அரசில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

மேலும், பெண்களை இழிவாகப் பேசிய, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட பல திமுகவினர் மீது இந்த விடியா அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். சட்ட நடவடிக்கைகளும் நீதியும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.

சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பது என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகிவிடும்.

எனவே கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என இ.பி.எஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?

Posted by - July 16, 2025 0
மனு கொடுக்க வந்தவர்களிடம் ’கல்யாணம் செய்துகொண்டதும் உடனே குழந்தை பிறந்துவிடுமா?’ என கேட்டது, தன்னுடைய மகனுக்கு முக்கியத்துவம் , நிர்வாகிகளை ஒருங்கிணைப்பதில் கோட்டை விட்டது என புகார்…

ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் – ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”

Posted by - March 8, 2025 0
திமுக தலைமையிலான அரசை 2026ல் மாற்றுவோம் என, மகளிர் தின வாழ்த்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார், சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழக…

எனது பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிப்பதை நிறுத்துங்கள்: அஜித்

Posted by - November 8, 2025 0
எனது பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள் என்று அஜித் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அஜித் அளித்த பேட்டியொன்றில் கரூர் விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து…

‘‘திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ – பொங்கல் விழாவில் பழனிசாமி பேச்சு

Posted by - January 16, 2026 0
மேட்டூர்: “எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும், இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுக ஆட்சி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *