sss 2

சும்மா இருங்கயா..! ஷூட்டிங்லாம் இல்லையாம், விஜய் மும்பை போக காரணம் இதுதான் – வதந்தி வாய்கள்

134 0

தவெக தலைவர் விஜய் ஜனநாயகன் திரைப்படத்தின் ரிஷுட்டிங்கிற்காக மும்பை சென்றதாக வெளியான தகவலில் உண்மையில்லை என கூறப்படுகிறது.

TVK Vijay: இயக்குனர் அட்லி வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தவெக தலைவர் விஜய், மும்பை சென்றுள்ளார்.

மும்பையில் தவெக தலைவர் விஜய்..

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகி, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்களை தேர்வு செய்வது போன்ற பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதனிடையே, முதல்முறையாக களம் காணும் விஜய் தலைமையிலான தவெக, கூட்டணி இன்றி 234 தொகுதிகளிலும் தணித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் நேற்று இரவு அவர் மும்பை சென்றடைந்தார். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகின. அதனை அடிப்படையாக கொண்டு இணையத்தில் ஏராளமான கட்டுக்கதைகள் பரவ தொடங்கியுள்ளன.

 

ஜனநாயகன் பேட்ச் வொர்க்?

குறிப்பாக பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் வெளியாகவிருந்த, அவரது நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் சென்சார் பிரச்னையால் திரைக்குவரவில்லை. அந்த படத்தை அண்மையில் தணிக்கை குழு பார்த்து முடித்துவிட்டதாகவும், இதையடுத்து மேற்கொள்ளவிருக்கும் கதை திருத்தங்களுக்கு ஏற்ப, சில காட்சிகளில் நடித்து கொடுக்கவுமே, விஜய் மும்பை சென்றுள்ளார் என பலரும் இணையத்தில் பதிவிட தொடங்கினார். இனி நடிக்கவே மாட்டேன் என சொன்ன விஜய் மீண்டும் நடிப்பதற்காக மும்பை சென்றுள்ளார் என ஒரு தரப்பினரும், தயாரிப்பாளரின் வலியை புரிந்து அவர் நடித்து கொடுக்க முன்வந்துள்ளார் என்று மற்றொரு தரப்பினர் களமாட தொடங்கிவிட்டனர். ஆனால், உண்மையில் அவர் சினிமா தொடர்பான எந்த பணிக்காகவும் மும்பை செல்லவில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

அட்லி வீட்டில் விசேஷம்..

இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா இரண்டாவது முறையாக கருவுற்று இருப்பதாகவும், அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவுமே விஜய் மும்பை சென்றுள்ளார். ராஜா ராணி எனும் திரைப்படம் மூலம் அறிமுகமான அட்லி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று முக்கிய கமர்ஷியல் படங்களை விஜயை வைத்து இயக்கினார். இதனால், அவர்களுக்கு இடையே வலுவான நட்பு தொடர்கிறது. அதன் அடிப்படையிலேயே அட்லியின் வீட்டு விசேஷத்தில் பங்கேற்க விஜய் சென்றுள்ளார். பிகில் படத்திற்கு பிறகு ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் படத்தை எடுத்து அதிரிபுதிரி ஹிட் கொடுத்த அட்லி, தற்போது அல்லு – அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோனேவை வைத்து பிரமாண்ட பொருட்செலவில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே, விஜய் அரசியலில் நுழைந்த பிறகு அவரது சின்ன சின்ன அசைவுகளும் மிகவும் தீவிரமாக நெட்டிசன்களால் கவனிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Post

Generated Image November 13 2025 5 02PM

பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.?

Posted by - November 13, 2025 0
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பாக தமிழக அரசு 5ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இது சாத்தியமா.?…
Generated Image November 17 2025 11 32AM

பிரசாந்த் கிஷோரிடம் இருந்து பாடம் கற்பாரா விஜய்?

Posted by - November 17, 2025 0
குஜராத் முதல்வராக இருந்த மோடியை நாட்டின் பிரதமராக உயர்த்த வியூகம் வகுத்தவர், பிஹாரில் நிதிஷ்குமார், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின்…
Generated Image January 19 2026 11 05AM

திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?

Posted by - January 19, 2026 0
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணையவுள்ளார். 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒரே மேடையில் கை…

தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி?

Posted by - December 15, 2025 0
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும்…

தவெக-வுடன் கூட்டணியா? தயக்கம் காட்டும் அரசியல் கட்சிகள் – என்ன செய்யப்போகிறார் விஜய்?

Posted by - July 28, 2025 0
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், விஜய்யுடன் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டி வருவதால் தவெக என்ன செய்யப்போகிறது? என்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *