“சென்னையில் இளம் திறனாளர்கள் அதிகம்” – சென்னை மாநாட்டில் பிரதமர் மோடி உரை

354 0

வெள்ள மேலாண்மையை செய்யாமல் ஊடக மேலாண்மையை செய்கிறார்கள். சிறு குறு தொழில் துறையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது – பிரதமர் மோடி

ஒரு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்த பிரதமர் மோடி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்

சென்னை விமானநிலையத்தில் இருந்து அண்ணா சாலையில் வந்த பிரதமருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசி வரும் பிரதமர் மோடி, ‘’வணக்கம் சென்னை என்று கூறி உரையைத் தொடங்கினார்.

ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் உற்சாகமாக உணர்கிறேன். இளம் திறனாளர்களை அதிகமாக கொண்டுள்ளது சென்னை. தமிழ்நாட்டிற்கும் எனக்கும் இருக்கும் உறவு மிகவும் பழமையானது. நீங்கள் வைத்திருக்கும் அன்பும் பழமையானது

நான் தமிழ்நாட்டிற்கு வரும்போது சிலருக்கு அச்சம்  ஏற்படுகிறது.  காரணம் என்ன தெரியுமா பாஜகவுக்கு ஆதரவு பெருகி வருவது தான் என்றார்.

மூன்றாவது முறை எனது ஆட்சியில் இந்தியா உலகின் 3-ஆவது பெரும் பொருளாதாரமாக மாறும். சென்னையில் ரூ.1,000 கோடி மதிப்பில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை தந்துள்ளோம். சென்னை மெட்ரோ, சென்னை விமான நிலையம் உள்ளிட்ட மிகப்பெரிய திட்டங்களை பாஜக அரசு கொடுத்துள்ளது

தமிழ்நாட்டை சிறப்பானதாக மாற்ற உறுதிபூண்டுள்ளோம்.  சென்னைக்கு பல்லாயிரக்கணக்கான கோடியில் திட்டங்களைக் கொடுத்துள்ளோம்.மிக்ஜாம் புயலின்போது மக்களுக்கு உதவ வேண்டிய திமுக அரசு, எந்தவொரு பொருட்டாகவும் கருதவில்லை. மக்களின் சுகதுக்கங்களில் மாநில அரசுக்கு அக்கறையில்லை  என்றார்.

வெள்ள மேலாண்மையை செய்யாமல் ஊடக மேலாண்மையை செய்கிறார்கள். சிறு குறு தொழில் துறையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று பேசினார்.

கொரோனா பெருந்தொற்றின்போது அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது. சிறு குறு நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வழங்கினோம். மத்திய அரசு திட்டங்களின் பலன்கள் பயனாளிகளுக்கு நேரடியாக செல்வதை திமுக விரும்பவில்லை. திமுக-வுக்கு குடும்பம்தான் முக்கியம். தமிழ்நாட்டு மக்கள் ஏமாற்றப்படாமல் நான் தடுப்பேன்மக்களுக்கு நேரடியாக பலன்கள் செல்வதால் திமுகவால் கொள்ளையடிக்க முடியவில்லை. மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது திமுக அரசு. திமுக கொள்ளையடித்த பணம் வசூலிக்கப்பட்டு மக்களுக்கு செலவு செய்யப்படும் என்பது மோடியின் உத்தரவாதம். திமுகவுக்கு அவர்கள் குடும்பத்தினர் மீது மட்டுமே அக்கறை, பாஜகவுக்கு மக்கள் மேல் அக்கறை என்றார்.

Related Post

பொது சொத்துக்கள் சேதம்! ”சட்டம் தன் கடமையை செய்யும்”அமைச்சர் ரகுபதி விஜய்க்கு பதிலடி

Posted by - September 15, 2025 0
“விஜய்யின் வருகையால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்க எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. தவெக விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர்…
sdbi

திடீர் ட்விஸ்ட்.! திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி.!

Posted by - February 28, 2026 0
தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்து வரும் நிலையில், தற்போது எஸ்டிபிஐ கட்சியை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு திமுக…

“கட்சிக்காக பேசினேன்.. நீக்குவார்கள் என எதிர்ப்பார்க்கல!” செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

Posted by - September 6, 2025 0
மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில்  நேற்று வெளிப்படையாக தெரிவித்தேன், கட்சியிலிருந்து நீக்குவதற்கு முன் ஜனநாயக அடிப்படையில் கட்சியிலிருந்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும் என்றார். கட்சி பொறுப்பில் இருந்து…

திருப்பரங்குன்றம் விவகாரம்: பாஜக-தவெக இடையே வார்த்தை போர் வெடித்து வருகிறது | அரசியல் அப்டேட்

Posted by - December 19, 2025 0
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பாஜக (BJP) மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (TVK)-இருவருக்கும் இடையே கடும் வார்த்தை போர் ஆரம்பமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், திருப்பரங்குன்றம்…

பாஜக-வை கழட்டிவிடுங்க… விஜய்யை உள்ளே கொண்டு வாங்க.. என்ன செய்வார் எடப்பாடி?

Posted by - July 14, 2025 0
அதிமுக கூட்டணியைப் பலப்படுத்த பாஜக-வுடனான உறவை துண்டித்துவிட்டு, விஜய்யின் தவெக-வை உள்ளே கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வலுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *