“செய்தி சேனல் ஒளிப்பதிவாளர் மீது கொடூர தாக்குதல்” – கண்டனம் தெரிவித்த அண்ணாமலை

190 0

திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தை, தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டதைப் படம்பிடித்த தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :நமது நாட்டின் கலாச்சார தலைநகரமான சென்னை, திமுக ஆட்சியில் போதைப்பொருள் தலைநகரமாக மாற்றப்பட்டுள்ளது. 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்திய, திமுக நிர்வாகியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான ஜாபர் சாதிக் என்பவரும் அவரது சகோதரர்களும் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பியோடி வருகின்றனர்.

நேற்றைய தினம் குஜராத் கடல் பகுதியில், தமிழகப் படகு மூலம் எடுக்கப்படவிருந்த ரூ.1,200 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் கைப்பற்றியுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், போதைப்பொருள் வியாபாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்வேன் என்று கூறினார். ஆனால் அதற்காக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பது, அவரது ஆட்சியில் பல மடங்கு அதிகரித்துள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் மூலம் தெரிய வருகிறது.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக, கோபாலபுரம் இளவரசருக்கு நெருக்கமான திமுக பிரமுகர் சிற்றரசு என்பவருக்குச் சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தை, தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டதைப் படம்பிடித்த தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது திமுக குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சஹாரா கூரியர்ஸ் நிறுவனம்தான், ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் விநியோக மையப்புள்ளியாக அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

திமுகவினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை தமிழக பாஜக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வர் பொறுப்பு வகிப்பது தமிழக மக்களுக்கு உழைப்பதற்காகவே தவிர போதைப்பொருள் வியாபாரிகளுக்காக அல்ல என்பதை நினைவுபடுத்துகிறோம் என அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

சட்டென்று மாறிய வானிலை… கொட்டித் தீர்த்த கனமழை… இன்று எங்கெல்லாம் மழை தெரியுமா?

Posted by - May 31, 2023 0
சென்னை மற்றும் புறநகரில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்சாரம்…

காலை 10 மணி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Posted by - August 24, 2023 0
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வருகிற 29-ந்தேதி வரை கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக…

சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

Posted by - November 7, 2024 0
41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது என அதிமுக…

பழைய வாட்டர் பாட்டில் கொள்முதல்…ஒரு தள்ளுவண்டி மட்டும் இருந்தால்…தினசரி ரூ 1000 வரை வருமானம் பார்க்கலாம்…!

Posted by - July 2, 2025 0
      #businessidea #business #businessideas #entrepreneur #entrepreneurship #businessowner #businessmotivation #startup #businesstips #businessmindset #motivation #success #smallbusiness #businessopportunity #businessadvice #businessplans #businesshelp…

14,121 உற்பத்தியாளர்கள் மூலம் தினமும் 1,38,000 லிட்டர் பால் கொள்முதல் – கலெக்டர் தகவல்

Posted by - November 15, 2023 0
திருப்பூர்: தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கால்நடை, பால்வளம்,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி பிரிவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *