செல்போன் செயலி மூலம் கலர் பிரிண்ட் எடுத்து ரூ.20 லட்சம் கடனை அடைக்க கள்ளநோட்டு அச்சடித்த வாலிபர்கள்

340 0

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (40). இவர் அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு வந்த நபர் ரூ.200 நோட்டுகள் 3 கொடுத்து இறைச்சி வாங்கினார். ரூபாய் நோட்டுக்களை வாங்கிப் பார்த்த அண்ணாதுரை அவை கள்ள நோட்டுகள் என்பதை தெரிந்து கொண்டார். இதையடுத்து அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் கரூர் மாவட்டம், பள்ளிப்பட்டியை சேர்ந்த உபைஸ் அலி (24) என்பதும், இவர் மேட்டூர் சதுரங்காடில் உள்ள காஜா மொய்தீன் (40) என்பவருக்கு சொந்தமான பேன்சி ஸ்டோரில் வேலை பார்த்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து சம்பந் தப்பட்ட பேன்சி ஸ்டோரில் மேட்டூர் டி.எஸ்.பி மரியமுத்து மற்றும் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். இதில் கலர் பிரிண்டரை பயன்படுத்தி கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது கண்டுபி டிக்கப்பட்டது. இதையடுத்து கள்ள நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய செல்போன, கலர் பிரிண்டர், கள்ள நோட்டுகள், காகிதத் தாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விபரம் வருமாறு:- மேட்டூர் காவேரி நகரை சேர்ந்த முகமது அலீபா மகனான காஜாமைதீன் (40) மேட்டூரில் 3 இடங்களில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

இவருக்கு ரூ.20 லட்சம் கடன் ஏற்பட்டது. இந்த கடனை அடைப்பதற்காக திட்டமிட்ட அவர் தனது உறவினரான தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மஜீத் தெருவை சேர்ந்த முகமது பாபு மகன் அப்துல் அகீம் (24), தனது கடையில் வேலை பார்த்த உபைஸ் அலி (24) என்பவரையும் மேட்டூருக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் 3 பேரும் மேட்டூர் சதுரங்காடியில் பேன்ஸி ஸ்டோரில் கலர் பிரிண்டர் ஒன்றை வைத்து, அதில் 200 ரூபாய் நோட்டுகளை செல்போன் செயலி மூலமாக நகலெடுத்து, மேட்டூர் முழுவதும் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

நேற்று காஜாமைதீன் நகல் எடுக்கப்பட்ட 200 ரூபாய் நோட்டுகளை உபைஸ் அலியிடம் கொடுத்து நாட்டுக் கோழி வாங்கி வரும்படி அனுப்பி வைத்தார். இந்த நோட்டுகள் போலியானவை என இறைச்சிக் கடைக்காரர் கண்டுபிடித்து விட்டதால் இந்த கும்பல் சிக்கியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கடை உரிமையாளர் காஜா மைதீன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கு கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்றும், எவ்வளவு கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டனர் என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

15 இடங்களில் சதமடித்தது… மக்கள் கடும் அவதி…!

Posted by - May 18, 2023 0
சென்னையில் அதிகபட்சமாக மாதவரத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில், நேற்று 15 இடங்களில் வெப்பநிலை சதமடித்தது. அதிகபட்சமாக வேலூர்…

2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமல்ல – சென்னை உயர்நீதிமன்றம்

Posted by - June 2, 2023 0
 2011ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்,…

உதயநிதி அறக்கட்டளைக்கும் நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? – அண்ணாமலை கேள்வி

Posted by - May 29, 2023 0
முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் இதுவரை பதில் வரவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்…

ஆளுநருக்கு நோ சொன்ன அஜித்குமார்.. இந்த விளையாட்டு எல்லாம் விஜய்யோடு நிறுத்திக்கங்க பாஸ்!

Posted by - February 15, 2025 0
என்னதான் வெளி உலகத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை என அஜித் காட்டிக் கொண்டாலும் நாட்டு நடப்புகளை அப்டேட்டில் வைத்திருக்கிறார் போல. அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது.…

என்னாது கொரோனா அதிகரிக்கிறதா! அப்படிலாம் இல்லையே.. டேட்டாவுடன் வந்த கொரோனா தரவு ஆய்வாளர்

Posted by - December 15, 2023 0
சென்னை: தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய கொரோனா வேரியன்ட் பரவவில்லை என கொரோனா தரவு ஆய்வாளர் விஜயானந்த் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *