“சேப்பாக்கத்தின் தென்றல் இனி செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்” – உதயநிதிக்கு செந்தில் பாலாஜி வாழ்த்து!

228 0

நாளை காலை 9:30 மணிக்கு அவர் அமைச்சராக பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

அமைச்சராக பதவியேற்க போகும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில் நாளை உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியானது. இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நாளை காலை 9:30 மணிக்கு அவர் அமைச்சராக பொறுப்பேற்கிறார்.

இதற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சேப்பாக்கத்தின் தென்றல் இனி தமிழ்நாடெங்கும் வீசட்டும் என கூறி வாழ்த்து தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் டிசம்பர் 14 காலை 9:30 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் 400 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையுடன் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை ஒதுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Post

காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன் தாக்கப்பட்ட விவசாயி!

Posted by - October 7, 2024 0
கோவையில் நடைபெற்ற ஆனைமலை – நல்லாறு திட்ட கோரிக்கை மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை…

அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?

Posted by - December 9, 2025 0
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக- பாஜக கூட்டணியை பலப்படுத்து அமித்ஷா திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறார். நெருங்கும் தமிழக தேர்தல் சட்டமன்ற…

விசிகவை ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக.. ”முட்டு கொடுப்பதை நிறுத்திட்டு கட்சியை காப்பத்துங்க பாஸ்”

Posted by - September 22, 2025 0
 திமுக மீதான விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தந்த விசிக எம்.எல்.ஏ., ஆளுர் ஷா நவாஸை தவெகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முழு நேரமும் திமுகவிற்கு முட்டுக் கொடுப்பதை…

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு : ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம்!

Posted by - March 23, 2023 0
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர்  பரபரப்பான வாதங்களை முன்வைத்த நிலையில், இரு தரப்பும் எழுத்து பூர்வமான வாதங்களை வெள்ளிக்கிழமை காலைக்குள்…

தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு: முதல்வருக்கு உதயநிதி வேண்டுகோள்

Posted by - December 15, 2025 0
திரு​வண்​ணா​மலை: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட இளைஞர்​களுக்கு அதிக வாய்ப்​பு​கள் வழங்க வேண்​டும் என்று முதல்​வரிடம் கோரிக்கை வைப்​பேன் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கூறி​னார். திரு​வண்​ணா​மலை​யில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *