ஜேம்ஸ் பாண்ட் லுக்கில் அஜித் குமார்!! விடாமுயற்சி படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு…

192 0

கடுமையான உணவு கட்டுப்பாடு மூலம் தனது உடலையே 30 கிலோ வரை அஜித் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை பட குழுவினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது வெளிவந்துள்ள அஜித் குமாரின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஜேம்ஸ்பாண்ட் படங்களின் நாயகன் போன்று அஜித் இருப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

துணிவு படத்தை தொடர்ந்து அஜித் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ஆவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிரேக் டவுன் என்ற படத்தை தழுவி விட முயற்சி திரைப்படம் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் தீபாவளிக்கு வருவதாக முதலில் கூறப்பட்டது.

பின்னர் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என தகவல் வெளிவந்து கடைசியாக விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஷூட்டிங் முழுமை அடையாத காரணத்தால் வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.இதற்கிடையே அஜித் நடித்துவரும் மற்றொரு படமான குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கலையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விடாமுயற்சி திரைப்படம் மார்ச் அல்லது ஏப்ரலில் வெளிவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் விடாமுயற்சி படத்துடைய இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக் குழுவினர் தற்போது அப்டேட் வெளியிட்டுள்ளனர்.

Related Post

படையப்பா படத்தின் வசூல் சாதனையை முறியடித்ததா கில்லி.. உண்மை இதுதான்

Posted by - April 18, 2023 0
ரஜினிகாந்த் நடித்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கி வெளிவந்த திரைப்படம் படையப்பா. இப்படத்தில் ரஜினிக்கு நிகரான நீலாம்பரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் மக்கள் மத்தியில் நல்ல…

ஜெயிலர் ரிலீஸுக்கு முன் சிவகார்த்திகேயனுக்கு போன் கால் செய்த ரஜினிகாந்த்.. காரணம் இதுதானா

Posted by - August 9, 2023 0
ஜெயிலர் ஜெயிலர் திரைப்படம் நாளை திரையரங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனுக்கு போன்…

இந்த வாரம் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?.. லிஸ்ட் இதோ

Posted by - March 6, 2025 0
சினிமா ரசிகர்கள் என்று வெளியாகும் புது படங்களை விரும்பி பார்ப்பதற்கு ஒரு தனி கூட்டமே உள்ளது. ஒவ்வொரு வாரமும் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளது என்று எதிர்பார்த்து…

நடிகர் அவதாரம் எடுத்த பாஜகவின் ஹெச்.ராஜா… வெளியானது ‘கந்தன்மலை’ ஃபர்ஸ்ட் லுக்!

Posted by - August 4, 2025 0
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான ஹெச்.ராஜா நடிக்கும் ‘கந்தன்மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஹெச்.ராஜா முறுக்கு மீசையுடன், ருத்ராட்ச மாலையுடன் காட்சியளிக்கிறார். பாஜகவின் தேசிய…

கடவுளே அஜித்தே, ஒருவழியா கிடைத்த தரிசனம்.. ரிலீஸ் தேதியோடு வெளியான விடாமுயற்சி டீசர் எப்படி இருக்கு.?

Posted by - November 29, 2024 0
விடாமுயற்சி படம் கடந்த வருடமே தொடங்கப்பட்டாலும் மாத கணக்கில் படப்பிடிப்பு இழுத்தடித்து வந்ததில் ரசிகர்கள் ரொம்பவே சோர்ந்து போனார்கள். கடவுளே அஜித்தே உங்க தரிசனம் எப்ப கிடைக்கும் என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *