Generated Image November 28 2025 4 38PM

டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ – முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்

200 0

டிட்வா புயலால் சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலெர்ட் விடுத்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர செயல்பாட்ட மையத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டிட்வா புயல் காரணமாக அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

முதலமைச்சர் கூறியது என்ன.?

ஆய்வுக்குப் பின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த பேட்டியில், “வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில், தெற்கு பகுதிகள் மற்றும் டெல்டா பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். ரெட் அலெர்ட்டும் கொடுத்திருக்கிறார்கள். அதனால், ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களை காணொலிக் காட்சி வாயிலாக தொடர்பு கொண்டோம்“ என தெரிவித்தார்.

மேலும், “ஏற்கனவே, நேற்றைய தினம் இதுகுறித்து என்னுடைய தலைமையில், தலைமைச் செயலாளர் முன்னிலையில், உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கூட்டத்தை கூட்டி, உரிய அறிவுரை வழங்கியிருக்கிறோம்“ எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

அதோடு, எல்லா மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களை அனுப்பி வைத்திருப்பதாகவும், அனைவரும் அவரவர்களுக்கு உரிய மாவட்டங்களுக்கு சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஏற்கனவே எந்தெந்த இடங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறதோ, அந்தந்த இடங்களில் கவனமாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.

மேலும், எந்த இடத்திலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்து விபத்து ஏற்படாமல் கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாகவும், அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

முதலமைச்சரின் எக்ஸ் தள பதிவு

இதைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை போட்டுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அந்த பதிவில்,

“#CycloneDitwah பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.

16 #SDRF படைகளும் 12 #NDRF படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

அனைத்துத் துறைகளும் முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்திட வேண்டும்! பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையினைப் பின்பற்றி, அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.“ என்று கூறியுள்ளார்.

 

Related Post

அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?

Posted by - May 31, 2025 0
ஆதவ் அர்ஜுனா அதிமுகவை கிண்டலடித்த வீடியோ வைரலான நிலையில், அதற்கு பதிலடி எங்கிருந்து வந்துள்ளது தெரியுமா.? சீமானிடமிருந்து. ஆம், அவர் ஆதவ் அர்ஜுனா குறித்த முக்கிய தகவலை…

தேர்தலுக்கு பின் கழகத்திலும் அரசியலிலும் பல மாற்றங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

Posted by - February 23, 2024 0
பிப்ரவரி 26ஆம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடுவீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜகவின் அநீதிகளை மக்களிடம் கொண்டு…

எல்லாம் பணத்திமிரு, அடுத்தவங்க கஷ்டம் உனக்கு சிரிப்பா இருக்கா.. நெட்டிசன்களிடம் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்

Posted by - April 1, 2025 0
சமீப காலமாக அடுக்கடுக்காக ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் யூடியூபர் இர்ஃபான். பாட்டியின் மீது கார் மோதியதில் தொடங்கி அவருக்கு குழந்தை பிறந்தது வரை எல்லாமே பஞ்சாயத்து தான்.ஆனால்…

ஊதுவத்தி கம்பெனியில் ரூ.10 கோடி பொருட்கள் நாசம்- வானில் இருந்து விழுந்த எரி கற்களால் தீ விபத்து

Posted by - April 19, 2023 0
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவர், தெக்குப்பட்டு பகுதியில் ஊதுவத்தி தொழிற்சாலை பெரிய அளவில் நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்து தெரிவிக்கலாம்- இந்திய சட்ட ஆணையம்

Posted by - July 4, 2023 0
சென்னை: திருமணம், விவாகரத்து, பரம்பரை, தத்தெடுப்பு, பாதுகாவலர் போன்ற பல்வேறு விவகாரங்களில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளன. அனைத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *