தத்தளிக்கும் (தென்)தமிழகம்…ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டியது..

312 0

வரலாற்றில் இல்லாத வகையில் தென் மாவட்டங்களில் மழை பெய்துள்ளதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

சென்னை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளதாக கூறினார். ஒரு சில இடங்களில் மேகவெடிப்பு போல மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டார். வரலாற்றில் இல்லாத அளவுக்கு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் மழை பெய்துள்ளதால் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா குறிப்பிட்டார்.நெல்லை மாவட்டத்தில் உடனடியாக வெள்ளம் வடிந்துவிடும் என்றும், ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளநீர் வடிய தாமதமாகும் எனவும் தலைமைச் செயலாளர் கூறி உள்ளார். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புபடையின் 17 குழுக்களில் 425 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் மேலும் 2 குழுக்கள் தூத்துக்குடிக்கு செல்வதாகவும் கூறினார்.உணவு விநியோகம் செய்ய சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள தலைமைச் செயலாளர்,  1070 என்ற இலவச எண்ணில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.  12 ஐஏஎஸ் அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் என பலர் தென் மாவட்டங்களில் முகாமிட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளை அவர்கள் முடுக்கி விட்டுள்ளதாகவும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா குறிப்பிட்டார்.

Related Post

விசிக எதிர்ப்பால் பாஜக கொடிகள் அகற்றம் @ கும்பகோணம் மகாமக குளக்கரை – நடந்தது என்ன?

Posted by - December 26, 2023 0
#kumbakonam #tnbjp #vck #annamalai #enmanenmakkal #dmk #pixeltv#pixelmedia கட்சி கொடிகள் அகற்றப்பட்ட மகாமக குளக்கரைப் பகுதி கும்பகோணம்: கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பால் பாஜக கொடிகள்…

கஞ்சாவின் தலைநகரமாக மாறிய தமிழகம் – அரசு மீது காட்டம் தெரிவித்த அண்ணாமலை..!!!

Posted by - April 23, 2024 0
தமிழகத்தின் வெவேறு இடங்களில் போதை ஆசாமிகளால் கடந்த மூன்று நாட்களில் நடந்தேறிய கொடூர சம்பவங்கள் தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

கோவில்களுக்குள் செல்போன், கேமராக்கள் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது- அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - September 2, 2023 0
சென்னை: பழனி தண்டாயுதபாணி கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒரு படம் சமூக வலைதளங்களில் உலாவி வருவதாக சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த…

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.170: சில்லறை விற்பனையில் 200 ரூபாயை தாண்டியது

Posted by - August 1, 2023 0
தக்காளி விலை தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ 160 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்து வந்த நிலையில், இன்று…

எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! – பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்!

Posted by - January 9, 2025 0
கடந்த மாதம் சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இணைந்து உணவுத்திருவிழா நடத்தினர். பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படுமா என்பது குறித்து துணை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *