w

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் தேவையா? – அஜித் சொன்னதாக வெளியான தகவல்.. உண்மை என்ன?

49 0

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் தேவையா என அஜித்திடம் கேள்வியெழுப்பட்டதாகவும், அதற்கு அவர் தேவையில்லை என சொன்னதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மாற்றம் வேண்டாம் என அஜித் சொன்னதாக போலியான தகவல் பரவி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் அதிருப்தியடைந்துள்ளனர். இதுதொடர்பாக அஜித் மேலாளர் விளக்கமளித்துள்ளார்.

234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் தங்கள் ஜனநாயக கடமையையாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் காலை 6.55 மணிக்கு தனது வாக்கினை பதிவு செய்தார். திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு வருகை தந்த அவர் முதல் ஆளாக வாக்களித்தார். அஜித்தைக் காண ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் புடைசூழ அஜித் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

பேசுபொருளாக மாறிய அஜித்தின் உடை

நடிகர் அஜித்குமார் வெள்ளை நிற கோட் உடையில் வாக்களிக்க வருகை தந்தார். அப்போது அவரின் ஆடையில் கருப்பு, சிவப்பு நிறம் இருந்ததால் யாருக்கு தான் ஆதரவு தெரிவிக்கிறார் என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். ஆனால் அஜித் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதால் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடக்கவில்லை என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

மாற்றம் தேவையில்லை என சொன்னாரா?

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் தேவையா என அஜித்திடம் கேள்வியெழுப்பட்டதாகவும், அதற்கு அவர் தேவையில்லை என சொன்னதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பலரும் அதிர்ச்சியடைந்தனர். அப்படியாக எந்த ஊடகத்திலும் தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் கூறியதாக வெளியான நமக்கு மாற்றம் தேவையில்லை  என்ற கருத்து பற்றி கேட்டபோது, ​​”அவர் சொன்னது சரிதான்” என்று முதலமைச்சர் ஸ்டாலினும் பதிலளித்தார். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில் மாற்றம் தேவையில்லை என அஜித் சொன்னதாக தகவல் வதந்தி எனவும், அதில் உண்மையில்லை எனவும் அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார். இதனால் இந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

Related Post

‘காங்கிரஸ் – த.வெ.க கூட்டணிக்கு அச்சாரம்’ ராகுலை சந்திக்கும் விஜய்..?

Posted by - July 21, 2025 0
’விக்கிரவாண்டியில் நடைபெற்ற விஜயின் முதல் மாநாட்டிலேயே ராகுல்காந்தியை பங்கேற்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன’ அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த கட்சி, அந்த கட்சியோடுதான்…
Gemini Generated Image r7rbbvr7rbbvr7rb

தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!

Posted by - April 7, 2026 0
தென் தமிழகம் அதிமுக-வின் கோட்டையாக திகழ்கிறதா? இல்லையா? கடந்த கால தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? என்பதை கீழே காணலாம். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம்…
Gemini Generated Image kvjcyqkvjcyqkvjc

பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு கடும் நெருக்கடி.. ஜோசப் விஜய் பெயரில் இத்தனை பேரா?

Posted by - April 7, 2026 0
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7600 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் ஜோசப் மற்றும் விஜய் என்கிற பெயரில்…
Gemini Generated Image l0si72l0si72l0si

திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!

Posted by - March 26, 2026 0
தவெக பெண் ரசிகைகளை விபச்சாரி என்று விமர்சித்த அரசியல் ஆலோசகர் பொன்ராஜை கடுமையாகச் சாடியுள்ளார் தவெக விஜய். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிப்பதா என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்துள்ளதாகவும் அவர்…
Gemini Generated Image slc13kslc13kslc1

காரைக்குடியில் ஓட்டு கூட கிடையாது.. இவர் வேட்பாளரா? – சீமானை விளாசிய கார்த்தி சிதம்பரம்!

Posted by - April 7, 2026 0
சீமானின் மாமனார் மறைந்த காளிமுத்து 1998ல் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் நின்றார். நான் ஜெயித்தாலும், தோற்றாலும் காரைக்குடிக்கு வருவேன் என சொன்னார். அந்த தேர்தலில் காளிமுத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *